குரு புக்தி // சனி திசையில் குரு புத்தி பலன்கள் - sani thisai guru puthi palangal

குரு புக்தி //  சனி திசையில் குரு புத்தி பலன்கள் - sani thisai guru puthi palangal


சனி தசையில் குரு புக்தி இரண்டு வருடங்கள், ஆறு மாதங்கள். பன்னிரெண்டு நாட்கள் இருக்கும்.


குரு பகவான் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானத்திலும் ஜனன லக்ன வாக்கு பாக்கிய ஸ்தானாதிபதியாயிருந்து தசாநாதனாகிய சனி பகவானுக்குத் திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் குடும்ப விருத்தி,உத்தியோக உயர்வு, செல்வப் பெருக்கு, நண்பர்களால் உதவி, மனோ தைரியம் எல்லாம் அமையும்.

ஆனால் குரு பகவான் லக்ன ஸ்தானத்திற்கு 5, 8. 12 இடங்களில் பகை நீசத்திலிருந்து தசாநாதனாகிய சனிக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்தால் பொருள் நஷ்டம். வியாபார மந்தம். உத்தியோக வாழ்க்கையில் பல சிக்கல்கள், கவலைகள், பொருள் அழிவு இவைகளே பலன்களாகும்.