புதன் திசை : சுய புத்தி பலன்கள் - puthan thisai suya puthi

புதன் தசை : சுய புக்தி

மாதுல் வித்யாகாரகனாகிய புதன் தசை பதினேழு வருஷங்கள், புதன் வியாபாரப் போக்கு உடையவர். வாக்கு வன்மை, வித்தை, கீர்த்தி, ராஜயோகம் முதலியவை அவர் அருளால் கிடைக்கும்.

புதன் சுயபுக்தி இரண்டு வருஷம், நான்கு மாதங்கள் இருபத்தேழு நாட்கள்.


புத பகவான் தசாநாதனாக இருக்கிறார். இவரே புத்தி நாதனாகவும் இருக்கிறார். இவரே ஆட்சியிலோ, உச்சத்திலோ, நட்பிலோ இருந்து விட்டால் ஒரு குறைவும் இல்லை. கல்வி ஞானம், சங்கீதம், நடனம் இவைகளில் ஈடுபாடு மாதா, பிதா, குரு தெய்வம் இவர்கள்பால் பக்தி, மனைவி மக்கள் பால் அன்பு சொரிந்த உல்லாசத்துடன் வாழ்க்கை நடத்துவார்கள்.

ஆனால் புத பகவான் 6, 8, 12 ஸ்தானங்களில் இருந்து பகை, நீசனாய் விட்டாலோ நேர் எதிரிடையான பலன்களையே அனுபவிக்க வேண்டியிருக்கும். கலகங்கள், வழக்குகள், இவைகளில் ஈடுபாடு, மனைவி மக்களுடன் தகராறு. வீட்டில் குழப்பம் இவைகளின் மத்தியில் மன நிம்மதியிழந்து வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும்.