சூரியன் புக்தி // அங்காரகத் திசையில் சூரியன் புத்தி பலன்கள் - cheyvathu thisai suriya puthi palangal
அங்காரகத் தசையில் சூரியன் புக்தி நான்கு மாதங்களும் ஆறு நாட்களும், இதற்குரிய பலன்,
சூரிய பகவானுடைய நிலையை கவனிக்க வேண்டும். சூரிய பகவான் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய அங்காரகனுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும் செல்வ நிலை திருப்தியாக இருக்கும். அதன் பலனாக தான தருமங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பிறருக்குத் தயங்காமல் உதவிகள் செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் உத்தியோகத்தில் அபிவிருத்தி காணலாம். மனோ நிம்மதியையும் சௌகரியங்கள் ஏற்படும். பெற
இவ்வாறில்லாமல் சூரிய பகவான் தசாநாதனாகிய அங்காரகனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்து ராகு, சனி, கேது இவர்களுடைய பார்வை பெற்றாலும் அல்லது பகை, நீச ஸ்தானத்திலிருந்தாலும் உஷ்ண வியாதியால் கஷ்டப்பட வேண்டி ஏற்படும். மனக் கவலைகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வறுமையும் பாதிக்கும்.
