சந்திர புத்தி பலன்கள் - chandra puthi palangal

சந்திர புத்தி பலன்கள் - chandra puthi palangal

அங்காரகத் தசையில் சந்திர புக்தி ஏழு மாதங்கள் இருக்கிறது. சந்திர பகவான் ஜனன லக்னத்திலாவது, கேந்திரம் திரிகோண ஸ்தானங்களிலாவது இருந்து தசாநாதனாகிய அங்காரகனின் கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும் பொன் ஆபரணங்கள் சேரும். செல்வச் செழிப்பேற்படும். பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்துக் கொள்ளும் பாக்கியமேற்படும். வியாபாரத்தில் உயர்வு, உத்தியோகத்தில் நல்ல பெயர் எல்லாம் ஏற்பட்டு சந்தோஷத்துடன் வாழ்க்கை நடத்துவார்கள்.


சந்திரன் அங்காரகனுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்து விட்டாலோ மனக்கவலைகள் பெருகும். இல்லாமையென்பது வாட்டும். பொருள்கள் நஷ்டமாகும். பலவகையிலும் கஷ்ட நஷ்டங்கள் மிகுந்த சோர்வு, உற்சாகக் குறைவு, சோம்பல் எல்லாம் ஏற்படும்.