கேது புத்தி // அங்காரக திசையில் கேது புத்தி பலன்கள் - chevvai thisai kethu puthi palangal

கேது புத்தி // அங்காரக திசையில் கேது புத்தி பலன்கள் - chevvai thisai kethu puthi palangal 

அங்காரக தசையில் கேது புக்தி நான்கு மாதங்கள் இருபத்தேழு நாட்கள் இருக்கும்.


ஜனன லக்னத்திற்கு புக்தி நாதனாகிய கேது 3, 6, 11 இந்த ஸ்தானத்திலிருந்தாலும் அங்காரகனுக்கு கேந்திர ஸ்தானத்திலிருந்தாலும் விரோதிகளை ஜெயங்கொள்வார்கள். திரவிய லாபங்களை எதிர்பார்க்கலாம். பகவத் தியானத்தில் ஈடுபடுவார்கள். சனி பார்வை பெற்று அங்காரகனுக்கு சத்ரு ஸ்தானத்திலிருந்தாலும் அக்னி, விஷம் இவைகளால் கஷ்டங்கள் சம்பவிக்கலாம். எனவே சர்வஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

புதன் ஜெனன லக்னத்திற்கு மறைவு ஸ்தானத்திலிருந் தாலும், சனிபார்வை பெற்று அங்காரகனுக்கு சத்துரு ஸ்தானத்தில் இருந்தாலும் அக்னி பயம், விஷ ஜந்துக்களால் பீடிதம் பலவகை கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும்.