சனி புத்தி // அங்காரக திசையில் சனி புத்தி பலன்கள் - chevvai thisai sani puthi palangal

சனி புத்தி // அங்காரக திசையில் சனி புத்தி பலன்கள் - chevvai thisai sani puthi palangal

அங்காரக தசையில் சனி புக்தி ஒரு வருடம், ஒரு மாதம் ஒன்பது நாட்கள் நீடிக்கும்.


சனி பகவான் தசாநாதனாகிய செவ்வாய்க்கு உச்சம், ஆட்சி, நட்பு ஸ்தானங்களிலாவது அல்லது கேந்திரத்திலாவது இருந்தால் மனதில் உற்சாகமும் எந்த வேலையையும் செய்து முடிக்கலாம் என்னும் ஆற்றலும் மிகுந்திருக்கும், கீர்த்தியோடும் இருப்பார்கள்.

இவ்வாறு இல்லாமல் சனி பகவான் அங்காரகனுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் பாதிக்கும். பலவித கவலைகளுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாவார்கள். மன அமைதி இருக்காது.