சிவபெருமானை எந்த நாட்களில் வழிபட்டால் சிறப்பானது / Lord Shivan best Day / Shivan Poojai Time :-
சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் திங்கட்கிழமை திங்கட்கிழமை சிவபெருமானின் நாள் அன்று நீங்கள் சிவபெருமான ஏர் பொழுதில், மாலை நேரம் அல்லது காலை நேரம் இந்த இரண்டு வேலையில் வழிபடுவதன் மூலமாக சகல நன்மைகளும் ஒருவருக்கு கிடைக்கும். அதனால் சிவபெருமானை பொதுவாக வழிபடுவதற்கு உகந்த நாள் திங்கட்கிழமை.
இதுவரை சிவன் கோவிலுக்கு நான் போனதில்லை என்று சொல்லக்கூடியவர்கள் சனிப்பிரதோஷம் அன்று மாலை 4:40 மணி முதல் மாலை 6: 40 மணிக்கு உள் யாரேனும் சனிப்பிரதோஷத்தில் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டால் அவர்கள் ஆயுள் முழுவதும் சிவபெருமானை வழிபட்டதற்கு சமம்.
120 பிரதோஷங்களை தொடர்ந்து வணங்கியவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று ஒரு ஐதீகம் உண்டு. அதனால் ஒவ்வொரு பிரதோஷமும் சிவன் பக்தர்களுக்கு மிக முக்கியமானது.
யாருடைய நட்சத்திரத்திற்கு அதி தேவதையாக சிவபெருமான் வருகிறார்களோ அவர்கள் வளர்பிறை அம்மாவாசை அன்று சிவபெருமானை வழிபடுவதால் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய வளர்ச்சிகளை யாராலும் தடுக்க முடியாது.

