17 ஜனவரி 2023 to 2026 நிகழக்கூடிய சனிப்பெயர்ச்சி அன்று நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் / Sani Peyarchi and Sani bhagavan Mandhiram

17 ஜனவரி 2023 நிகழக்கூடிய சனிப்பெயர்ச்சி அன்று நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் / Sani Peyarchi and Sani bhagavan Mandhiram:-

17 ஜனவரி 2023 அன்று நிகழக்கூடிய சனிப்பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் மாற்றத்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அப்படி இரண்டரை ஆண்டு, ஏழரை ஆண்டு இருக்கக்கூடிய சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நடக்க இருக்கிறதோ அந்த ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.


இந்த மந்திரத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் கட்டாயம் காலையில் எழுந்தவுடன் சொல்லலாம் அப்படி இல்லை என்றால் ஏதாவது நீங்கள் முக்கியமான நிகழ்வுக்கு போகின்றீர்கள், காரியத்திற்கு போகின்றீர்கள். அப்போது இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லலாம் அல்லது எப்போதெல்லாம் கஷ்டமான நேரம் வருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் இந்த மந்திரத்தை தாராளமாக சொல்லலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை நான்கு முறை என்று பலமுறை உங்களுக்கு ஏற்றார் போல் நீங்கள் சொல்லலாம் அதற்கு எந்த விதத்திலும் விதி விளக்கும் அல்ல.

மந்திரம்:-

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே, மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாயாக,
சச்சரவு இன்றி சாகா நெறியும்,
இச்சகம் வாழ இன்னருள் தாதே.

இந்த மந்திரத்தை சனிப்பெயர்ச்சி நடக்கக்கூடிய அத்தனை பேரும் சொல்வதால் கண்டிப்பாக சனீஸ்வரன்  தாக்கம் குறைந்து அவருடைய மனம் சாந்தி அடைந்து அத்தனை பேருக்கும் நன்மைகளை செய்யக்கூடிய வல்லமை கொண்ட மிக சக்தி வாய்ந்த மந்திரம் இது. கண்டிப்பாக இதை தினமும் காலையில் சொல்லி வாருங்கள் இந்த சனிப்பெயர்ச்சி முடியும் வரை உங்களுக்கு எந்த விதை கட்டப்பலானும் வராமல் சனீஸ்வரன் அருள் புரிவார்.