மேஷம் ராசி மே மாதம் ராசி பலன் 2023 / Mesham Rasi May Month Rasi Palam 2023

அன்புள்ள மேஷம் ராசி நேயர்களே வணக்கம், உங்கள் ஜென்ம ராசியில் புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் உங்களுக்கு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள் மற்றும் எந்த வித பிரச்சினைகளையும் நீங்கள் தைரியத்துடன் எதிர்கொள்ளும் பலம் உங்களுக்கு உண்டாகும். அதுமட்டும் அல்லாமல் பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவதுடன் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள உங்களால் முடியும். குருவின் பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் மங்கலகரமான சுபகாரியங்கள் உங்களுக்கு கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இந்த ஆண்டு வரன்கள் பார்த்தால் கண்டிப்பாக திருமணம் நடக்கும்

● வணங்கவேண்டிய தெய்வம் துர்க்கையம்மன்