ஒருவருடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் அதிகம் அளவு வரும்போது யாராவது நமக்கு நல்லது செய்து விடமாட்டார்களா என்று பொதுவாக நம்முடைய மனம் இயங்கும் அந்த சூழ்நிலையில் யாரோ ஒருத்தர் வந்து உங்களுக்கு ஒரு வேலை யாராவது உங்களுடைய சொந்தக்காரர்களும் அல்லது எதிரிகளோ உங்களுக்கு பில்லி சூனியம் ஏவல் ஏதாவது வைத்திருக்க போகிறார்கள் ஒரு முறை யாரையாவது பார்த்து அதை தெரிந்து கொள்ளுங்கள் என்று நம் தலையில் ஏத்தி விடுவார்கள்.
நாமும் பல மருத்துவரை பார்த்திருப்போம் பல சட்ட ஆலோசகரை பார்த்திருப்போம். அல்லது பல விஷயங்களை நம் வாழ்க்கையில் இருந்து மீட்டெடுக்க செய்திருப்போம் ஆனாலும் பிரச்சனைகள் நம் வாழ்க்கையில் வந்து கொண்டே இருந்திருக்கும் அப்போது நமக்கு யாரோ சொன்ன அந்த பில்லி சூனியம் ஏவலை பற்றி இந்த மனம் சிந்திக்க ஆரம்பிக்கும் அந்த சிந்திக்கை நம்பவும் ஆரம்பிக்கும் அப்படி நம்பிக்கையில் பிறக்கக்கூடிய விஷயம் தான் பில்லி சூனியம் ஏவல் இது போன்ற பிளாக் மேஜிக்.
பொதுவாக பில்லி சூனியம் ஏவல் இது எல்லாம் கட்டுக்கதைகள் உண்மை என்னவென்றால் ஒரு விஷயத்தை நம் மனம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது ஏற்கனவே நம் மனம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது ஒருவேளை இதன் மூலமாக நமக்கு நல்லது நடக்குமா என்ற ஒரு நம்பிக்கையில் நாமும் அதை செய்து பார்ப்போம்.
நம்ம மனம் பில்லி சூனியம் ஏவல் இதை பற்றி நம்பி இருக்கும் ஒரு மாந்திரீகரிடம் போய் அவர் ஏதோ ஒன்னு செஞ்சி நமக்கு எலுமிச்சை பழத்தை கொடுத்திருப்பார் நம் மனமும் உண்மையிலேயே மருத்துவரை பார்த்த நோயாளி போல சந்தோஷப்பட்டு நம்மை விட்டு போய்விட்டது என்று அங்கேயே உளவியல் ரீதியாக நம் மனம் மாறிவிட ஆரம்பித்து விடுகிறது இதுதான் உண்மை.
பொதுவாக பில்லி சூனியம் ஏவல் இது எல்லாம் உங்கள் மனம் நம்பும் விதத்தில் இருக்கிறது தவிர வேறு எதுவும் அல்ல மற்றும் வாழ்க்கையில் கெட்ட நேரம் நல்ல நேரம் என்று இரண்டு உள்ளது அந்த நேரம் நமக்கு வரும்போது எல்லாம் நல்லதாக நடக்கும் அதுவரை நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்