வீட்டிற்கு டிவி(Tv) வாங்கும் போது நீங்கள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் | How to Buying Best Tv ( Television) in best price for Tips

இன்றைய காலகட்டத்தில் டிவி என்பது மிக மிக முக்கியமான விஷயமாக அமைந்துவிட்டன. கிராமத்தில் இருக்கக்கூடிய வீடாக இருந்தாலும் சரி நகரப்புறத்தில் இருக்கக்கூடிய வீடாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரர்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய வீட்டில் அவரவர்கள் வசதிக்கு ஏற்ப டிவிகள் இருப்பது வழக்கமாகிவிட்டது பழக்கமாகிவிட்டது என்பதை விட பழக்கப்படுத்தி விட்டார்கள் என்பதுதான் உண்மை. பொழுதுபோக்கு விஷயங்களில் டிவி முதன்மையாக திகழ்கிறது, இன்று டிவி இல்லாமல் பெரும்பாலான மக்கள் தனிமையில் இருக்க முடியாது அதையும் மீறி இருந்தால் டிப்ரஷன் என்ற ஒரு விஷயம் அவர்களை சார்ந்து விடும் என்பதற்காக பல பேரினுடைய மனப்பாரங்களை குறைத்து வெளி உலகத்தை பார்க்க முடியாதவர்கள் கூட வீட்டுக்குள் அமர்ந்து சந்தோஷப்படுவதில் இன்று டிவி முக்கியத்துவம் வகிக்கிறது. அந்த வகையில் நாம் டிவி வாங்கும்போது எதை பார்த்து டிவி வாங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.

1. முதலில் நீங்கள் டிவி வாங்கும் போது எந்த பட்ஜெட்டில் டிவி வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

2. கம்பெனி பிராண்டட் டிவி எப்போதுமே விலை உயர்வாக இருக்கும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் டிவியின் விலையை விட ஜிஎஸ்டி விலை அதிகமாக இருக்கிறது.

3. நாம் குறிப்பிட்ட விலையில் எந்த பிராண்ட் நன்றாக இருக்கிறது என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். நல்ல பிராண்ட் பார்ப்பதற்கு குவாலிட்டி நன்றாக இருக்கும் ஆனால் விலை அதிகமாக இருக்கும் அதனால் நாம் முதலில் நமக்கு தகுந்த விலையை முடிவு செய்து அதற்குள் எது பெஸ்ட் என்பதை தீர்மானிக்க வேண்டும் 

4. டிவியின் பிக்சர் ரெசுலேஷனை நாம் முடிவு செய்ய வேண்டும் 1080 மெகா பிக்சல் போதுமானது. இதற்குமேல் குவாலிட்டி என்று போனால் 4k வரும் அது விலை அதிகமாக இருக்கும் அதனால் 1080 மெகா பிக்சல் போதுமானது

5. ஆண்ட்ராய்டு டிவி ஸ்மார்ட் டிவி என்று இரண்டு உள்ளது. ஆண்ட்ராய்டு டிவியில் நமக்குத் தேவையான மொபைல் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதில் நாம் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். ஸ்மார்ட் டிவி என்பது அதிலேயே டிபால்ட் ஆக கொடுக்கக்கூடிய அப்ளிகேஷன் மட்டுமே பயன்படுத்த முடியும்.

6. முப்பதாயிரம் நீங்கள் உங்களுடைய பட்ஜெட்டாக வைத்தால் அந்த முப்பதாயிரத்திற்கு 32 இன்ச் வாங்குவதைவிட 42 inch tv நன்றாக இருக்கும் பெரியதாக இருக்கும் அது மட்டுமல்லாமல் அந்த 32,000 க்கு அல்லது 30 ஆயிரத்திற்குள் எந்த டிவியினுடைய ரெஸுலேஷன், கான்ட்ரஸ்ட், பிரைட்னெஸ், குவாலிட்டி  நன்றாக இருக்கிறது என்பதை ஒன்றுக்கு பத்து கடை ஏறி இறங்கி பார்த்து தெரிந்து விட்டு அதற்கு அப்புறம் நீங்கள் வாங்க வேண்டும்.

7. என்னைப் பொருத்தவரை ஸ்மார்ட் டிவி வாங்குவதைவிட ஆண்ட்ராய்டு டிவி வாங்கிக் கொண்டால் உங்களுக்கு தேவையான அப்ளிகேஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

8. பல்லாயிரம் ரூபாய் போட்டு ஒரு டிவியை வாங்கும்போது கூடவே ஸ்டெபிலைசரையும் வாங்க வேண்டும். நம்முடைய வீட்டில் மின்சாரம் முன் பின்னுமாக வந்து கொண்டிருக்கும் அதனால் சீராக டிவிக்கு கிடைப்பதற்கு ஒரு ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஒரு ஸ்டெபிலைசர் வாங்கி போட்டுக் கொள்வது நல்லது.

9. டிவி வாங்குவதற்கு முக்கியமான விஷயம் முதலில் நாம் நம்முடைய விலையை தீர்மானிக்க வேண்டும் பிறகு 1080 மெகா பிக்சரை போதுமானது ஒரு ஸ்டெபிலைசர் பிறகு நாம் விலைக்கு ஏற்ப எந்த பிராண்ட் நன்றாக இருக்கிறது அதை நாம் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்

நீங்கள் புதிதாக டிவி வாங்கவே வாங்கக்கூடியவராக இருந்தால் இந்த ஒன்பது விஷயங்களை தெரிந்து கொண்டு நீங்கள் டிவி வாங்குவது நன்மையாக இருக்கும்
Tags