ஒருவருடைய வாழ்க்கையில் வீடு கட்டுவது என்பது கனவாகவே சென்று விடுகின்றன. அந்த கனவையும் மீறி ஒருவர் வீடு கட்டும் பட்சத்தில் அவர்கள் என்னென்ன விஷயங்களை முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். இந்த பதிவை முழுமையாக படியுங்கள் நிச்சயமாக வீடு கட்டுவதற்கான அத்தனை விஷயங்களும் உங்களுக்கு நன்றாக புரியும்.
குறிப்பு: நீங்கள் வீடு கட்ட ஆரம்பிக்கும்போதும், ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்டுவதற்கான பொருளின் விலைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது சிமெண்ட் என்ன விலை, செங்கல் என்ன விலை, ஆலோ பிளாக் என்ன விலை, மணல் என்ன விலை, எம் சாண்ட் என்ன விலை, கம்பிகள் என்ன விலை, மரம் என்ன விலை என்று அத்தனை விஷயங்களையும் முதலில் தெரிந்து கொண்டு ஒரு பட்டியலை ரெடி பண்ண வேண்டும்
வீடு கட்டுவதற்கான முக்கியமான விஷயம்
1. வீடு கட்டுவதற்கு முன் ஒரு மேஸ்திரியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்த மேஸ்திரியிடம் நீங்கள் கூலிக்கு விடுவதை விட கான்ட்ராக்ட் சதுரத்திற்கு இவ்வளவு என்று பேசிக்கொள்ள வேண்டும் ஏனென்றால் தின கூலி விடுவதன் மூலமாக உங்களிடமிருந்து அதிக பணத்தை அவர்கள் வசூலிக்கலாம் இதுவே நீங்க கான்ட்ராக்ட் சதுரத்திற்கு இவ்வளவு என்று பேசினாள் உங்களுக்கு அதில் லாபம்.
2. மேஸ்திரியிடம் நீங்கள் சதுரத்திற்கு பேசும்போது உள்ள அளவு எவ்வளவோ அதை நீங்கள் சதுரத்திற்கு பேச வேண்டும், ஸ்லாப் அத்தனையும் அரை சதுரத்திற்கு பேச வேண்டும் ஏனென்றால் இன்று ஊர் உலகில் இருக்கக்கூடிய அத்தனை மேஸ்திரிகளும் இன்ஜினியர்களும் ஸ்லாப்பை பொறுத்தவரை அரை சதுரத்திற்கு தான் வசூலிக்கப்படுகிறார்கள்.
3. செங்கல் விலை மழை காலத்தில் ஏறும் அப்படி நீங்கள் மழைக்காலத்தில் வீடு கட்டினால் தண்ணீர் விடுவதற்கான வேலை குறையும் ஆனால் செங்கல் விலை அதிகரிக்கும் அதனால் நீங்கள் கட்டக்கூடிய அடுக்குக்கு தகுந்தவாறு செங்கலை முன்கூட்டியே ஒரு ஐந்தாயிரம் கல்லோ பத்தாயிரம் கல்லோ வாங்கி அடுக்கிக் கொள்ள வேண்டும் இதனால் நமக்கு லாபம் கிடைக்கும்.
4. சிமெண்ட் பொருத்தவரை நீங்கள் மொத்தமாக அதாவது 50 மூட்டை 100 மூட்டை வாங்கும்போது ஏற்றுகூலி இறக்கு கூலி உங்களுக்கு இலவசமாக கிடைக்கும். நீங்கள் 10 மூட்டை 15 மூட்டை வாங்கினால் உங்களுக்கு அதில் லாபம் கிடைக்காது ஏற்றுகூலி இறக்கு கூலி நீங்கள் கொடுப்பது போல் வரும் இதுவே நீங்கள் மொத்தமாக 50 மூட்டை 100 மூட்டை வாங்கும்போது வண்டி செலவு உங்களுக்கு மீறும்.
5. வீட்டு வேலை தொடங்கிய உடனே ஜன்னல் கதவுக்குத் தேவையான மரத்தை வாங்கி ஆர போட வேண்டும். எதற்காக மரத்தை முன்கூட்டியே வாங்கி ஆர போட வேண்டும் என்றால் அதில் இருக்கக்கூடிய ஈரப்பசை காய்ந்து போகும் போது மரம் முறியாமல் நன்கு ஸ்ட்ராங்காக இருக்கும்.
6. கம்பி வாங்கும்போது ஒன்றுக்கு மூன்று கடை விசாரித்து எங்கு 50 பைசா ஒரு ரூபாய் நமக்கு கம்மியாக கிடைக்கிறதோ அங்கு நாம் கம்பிகளை எடுக்கலாம் இடம் நமக்கு பதுக்கி வைப்பதற்கு இருந்தால் விலை கம்மியாக இருக்கும் போதே நம் வாங்கி வைத்துவிடலாம் இடமில்லாதவர்கள் தேவைப்படும் நேரத்திற்கு வாங்கலாம்.
7. மேஸ்திரிகளிடம் நீங்கள் சதுரத்திற்கு விலை பேசும் போது வேலை நாட்களைக் குறித்துக் கொண்டு வேலை செய்த நாட்களுக்கு உண்டான சம்பளத்தை மட்டும் கொடுக்க வேண்டும் பிறகு கடைசியாக அவர்களுடைய லாபத்தை மொத்த சதுரம் எவ்வளவு என்று கணக்கிட்டு அதை நாம் கொடுக்கலாம் நீங்கள் சதுரத்திற்கு தான் பேசி விட்டோம் என்று பணத்தை வாரி வாரி கொடுத்தால் கடைசியில் ஏமாந்து நிற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள் அதனால் செய்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, அந்த நாட்களுக்கு தகுந்த சம்பளத்தை மட்டும் வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமை கொடுக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
8. மேஸ்திரியிடம் சதுரத்திற்கு பேசும்போது ஏ டூ இசட் கம்பி கட்டுவதற்கான ஆள், மோல்டிங் போடுவதற்கான ஆள் அத்தனையும் உங்களுடைய பொறுப்பே என்று சொல்லி பேச வேண்டும்.
9. பெயிண்டிங் நீங்கள் உங்கள் வீட்டுக்கு தொடங்கும்போது அதுவும் கூலி என்று பேசாமல் சதுரத்திற்கு நீங்கள் பேசலாம் அது உங்களுக்கு வேலை எளிதாக முடியும் லாபமும் கிடைக்கும்.
10. டைல்ஸ் வாங்கும்போது ஒன்றுக்கு இரண்டு கடை ஏறி இறங்கி விசாரித்த பிறகு tiles செய்வாங்க வேண்டும் குறிப்பாக லாட் ஆக விற்கக்கூடிய மிகப்பெரிய கடைகள் கம்பெனிகள் இருக்கின்றன அந்த இடத்திற்கு போகி நீங்களே நேரடியாக போய் பேசும்போது இரண்டு லட்சம் மூன்று லட்சம் விலை வந்தால் அதை அடித்து பிடித்து ஒரு லட்சம் ஒன்னேகால் லட்சத்திற்கு உங்களால் நிச்சயமாக வாங்க முடியும் அது உங்கள் கையில் உள்ளது நீங்கள் பேசும் பேச்சால் உங்கள் டைல்ஸ் விலை குறைக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
11. எலக்ட்ரீசியன் பொருள் விலை கம்மியாக இருக்கும் போது நீங்கள் வாங்கி வைப்பதற்கு இடம் இருந்தால் வாங்கி வைத்துவிடலாம் அல்லது இடமில்லாதவர்கள் தேவைப்படும் நேரத்தில் வாங்கலாம் எங்கு விலை கம்மியாக இருக்கிறது அங்கு தேர்ந்தெடுத்து வாங்குங்கள் ஒன்றுக்கு இரண்டு கடை ஏறி இறங்கி விலை பட்டியலை தயார் செய்து வித்தியாசம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்த பிறகு வாங்குங்கள்.
12. எலக்ட்ரீசியனும் கூலியோ அல்லது காண்ட்ராக்ட் கணக்கிலோ அவர்கள் வரமாட்டார்கள் எலக்ட்ரீஷனைப் பொறுத்தவரை செய்வதற்கான காசு தான் அது எந்த எலக்ட்ரிஷன் ஆக இருந்தாலும் சரி ஒரு சுச்சிக்கு இவ்வளவு காசு ஒரு பாயிண்ட்டுக்கு இவ்வளவு காசு என்று வாங்குவார்கள் அதை பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தப் 12 பாயிண்டும் நிச்சயமாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக ஒன்றுக்கு இரண்டு பேரை விசாரித்த பிறகு முழுமையாக தங்களை தயார்படுத்திக் கொண்ட பிறகு வீடு கட்டுவதற்கான வேலையை தொடங்குங்கள் ஏனென்றால் கொஞ்சம் ஏமாந்தாலும் நம்மை ஏமாற்றி விடுவார்கள் அதனால் பணத்தை கொடுக்கும் போது பார்த்து பாதுகாப்போடு கொடுங்கள் குறிப்பாக செய்யும் நாட்களுக்கு என்ன கூலியோ அதை மட்டும் கொடுங்கள் மீதி பணத்தை கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விடுங்கள் அது உங்களுக்கு நல்லது வேலையும் சுறுசுறுப்பாக நடக்கும்
