■ பூசணிக்காயிலிருந்து விதைகளை நீக்கி தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்க வேண்டும் இத்துடன் மிளகு சீரக தூள் மற்றும் உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
■ அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் குணமாகும் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
■ மாதுளை பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும் வயிற்று வலி மற்றும் வயிற்று சம்பந்தமான அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.
■ அத்திக்காயை சிறு பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும் மற்றும் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
■ நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவு சாப்பிட்டால் குடல் புண் ஆறும் அல்சர் வராமல் பாதுகாக்கும்.
