நம் வீட்டு பூஜை அறையில் நாம் எந்த கடவுளின் புகைப்படம் வைக்க வேண்டும் எந்த கடவுளின் புகைப்படம் வைக்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்துகொள்ள மறக்காமல் இந்த பதிவை பாருங்கள்

கோவில் எடுத்துக்கொண்டால் அத்தனை கடவுள்களும் ஒரு கோவிலுக்குள் இருக்கும் அதற்கு விதிவிலக்கு கிடையாது ஆனால் வீடு என்று எடுத்துக் கொண்டால் நிச்சயமாக விதிவிலக்கு இருக்கும் அதாவது இன்று இந்த பதிவில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பூஜை அறையில் எந்த கடவுளை வைக்க வேண்டும் எந்த கடவுளை வைக்கக் கூடாது என்பதைப் பற்றி தெளிவாக பார்க்க போகின்றோம் இது பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கலாச்சாரங்களை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்

பொதுவாக வீட்டில் பூஜையறையை என்பது மிக முக்கியம் காரணம் அறிவியல் ரீதியாக நம் முன்னோர்கள் சொன்ன விஷயத்தைப் பற்றி பார்க்கலாம் பொதுவாக வீட்டுக்குள் பூஜை அறை இருப்பது என்பது அதனுடைய கான்செப்ட் பூஜை செய்வதற்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்பதாகும் அதாவது வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்து பிறகு பூஜை அறையை சுத்தம் செய்து அதன் பிறகு கடவுளுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இதனால் நம் சுற்றி இருக்கக் கூடிய இடங்கள் நம் வீடு சுத்தமாகும் சுகாதாரத்தோடு இருக்கும் என்பதனால் நம் முன்னோர்கள் வீட்டிற்குள் கோவில் வைக்க முடியாது என்பதற்காக வீட்டிற்குள் பூஜையறை என்ற ஒரு விதியைக் கொண்டு வந்தார்கள்

சரி பூஜையறைக்குள் எந்தெந்த கடவுளை வைத்தால் சிறப்பு வைக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்;

முருகர் விநாயகர் வெங்கடாஜலபதி லட்சுமி சரஸ்வதி இந்த ஐந்து புகைப்படங்கள் கொண்ட புகைப்படத்தை பூஜை அறையில் வைக்கலாமா. மற்றும் கிருஷ்ணர் முனீஸ்வரன் மாரியம்மன் இப்படி பல கடவுள்கள் தமிழ்வழி கடவுள்கள் அத்தனையும் நாம் வைக்கலாம் தவறு இல்லை இதனால் நமக்கு நன்மைகள் நடைபெறும் சிவனை பொறுத்தவரைக்கும் வீட்டுக்குள் வைக்கக்கூடியது திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய சிவன் புகைப்படத்தை வைக்கலாம் சிவன் உருவம் கொண்ட புகைப்படத்தை வீட்டுக்குள் வைக்கக்கூடாது.
இந்த ஐந்து கடவுள்களும் நமக்கு நன்மைகளை வாரி வழங்கக் கூடியவர்கள் நம்முடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமாக உறுதுணையாக இருக்க கூடிய கடவுள்கள் அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக இந்த ஐந்து புகைப்படங்கள் இருக்கும்

பூஜையறையில் எந்தெந்த புகைப்படத்தை வைக்கக்கூடாது;

பூஜை அறையில் சிவன் புகைப்படத்தை வைக்கக் கூடாது அதுவும் சிவன் முழு உருவமாக இருக்கக்கூடிய சிவன் புகைப்படத்தை வைக்கக்கூடாது லிங்கவடிவில் இருக்கக்கூடிய புகைப்படமாக இருந்தால் அதாவது திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய லிங்க வடிவ புகைப்படத்தை பூஜை அறையில் வைக்கலாம் மற்றும் ஐயப்பன் படத்தை வைக்கக்கூடாது மற்றும் காளியம்மன் புகைப்படத்தை வைக்கக்கூடாது அதாவது ஆக்ரோஷமாக இருக்கக்கூடிய கடவுளின் புகைப்படங்களை எல்லாம் வைக்கக்கூடாது.

ஏன் இந்த புகைப்படத்தை எல்லாம் நாம் வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்கின்றார்கள் என்றால் சிவன் காளியம்மன் ஐயப்பன் இப்படி இருக்கக் கூடிய தெய்வங்கள் எல்லாம் சுத்தமானவர்கள் அதாவது மாமிசம் உட்கொள்பவர்கள் வீடு சுத்தமாக இருந்தால் மட்டுமே இந்த புகைப்படங்களை வைத்துக்கொள்ள வேண்டும் குறிப்பாக இந்த வகையான புகைப்படங்கள் நம் பூஜை அறையில் இருக்கும் போது நிச்சயமாக சுத்தபத்தமாக இருந்தே ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நமக்கு சில தவறான பாதிப்புகள் உண்டாகும் அளவிற்கு செய்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது நம் முன்னோர்களிடம் அதன் அடிப்படையிலேயே சிவன் ஐயப்பன் போன்ற புகைப்படங்களை மீட்டுக்கொள்வதற்கு பயப்படுவார்கள் காரணம் சுத்தமாக இருந்தால் மட்டுமே இந்த வகையான புகைப்படங்களை வைக்க வேண்டும்

சரி நான் சிவன் புகைப்படத்தை வைத்திருக்கின்றேன் ஐயப்பன் புகைப்படத்தை வைத்திருக்கின்றேன் எனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை என்று நீங்கள் சொன்னால் பரவாயில்லை ஏன் இதை வைக்க கூடாது என்றால் அவரவர்களுக்கு உண்டான நாட்களில் அந்த புகைப்படங்களுக்கு நாம் பூஜை செய்ய வேண்டும் அப்படி செய்யாத போது அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள் நம்மிடம் அதனால் நமது பாவ கணக்கில் சேர்ந்து கொண்டு போகும் அதனாலேயே பெரும்பாலும் நம் முன்னோர்கள் சில புகைப்படங்களை பூஜை அறையில் வைப்பதற்கு யோசிப்பார்கள் அந்த வகையில்தான் இன்று நாம் இந்த பதிவில் பார்த்து இருக்கின்றோம்

நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் முடிந்தவரை இதைப் பகிருங்கள் அனைத்து ஆன்மிகவாதிகளும் தெரிந்து கொள்ளட்டும்