சீரடி சாய்பாபா உங்களோடு இருப்பதை, உங்களோடு பேசுவதை எப்படி அறிந்து கொள்ள போகின்றீர்கள்

இந்தியாவில் பிறந்த மகான்கள் ஏராளமானோர் இருக்கையில் சீரடி சாய்பாபா அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு குருவாக திகழ்கின்ற. இன்று இந்த பதிவில் சீரடி சாய்பாபா உங்களோடு இருக்கிறார், உங்களோடு பேசுகிறார்  என்பதை உணரும் விஷயத்தைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம்

சீரடி சாய்பாபா மிகவும் பிரபலமான தெய்வங்களில் ஒருவர். இன்று திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக பணக்கார கடவுளாக திகழ கூடியவர் சீரடி சாய்பாபா அவர் செய்த லீலைகள் மிக முக்கியமானது  பக்தர்கள் கூட அவர் எப்படி பேசுகிறார் என்பதையும் சாய் பக்தர்கள் எவ்வாறு அறிந்துகொள்வார்கள். பொதுவாக சீரடி சாய்பாபா தன்னுடைய பக்தர்களுடன் பேசிப் பழகிய அனுபவங்கள் பக்தர்களுக்கு ஏராளமாக உண்டு அதில் சில எடுத்துக்காட்டுகளை தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்

இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஒவ்வொரு ஊருக்கும் சாய்பாபா கோவில் நிச்சயமாக இருக்கும், அப்படி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சாய்பாபாவிடம் தன்னுடைய குறைகளை கூறி வேண்டிக் கொள்வார்கள் அப்படி சாய்பாபாவிடம் குறைகளை கூறி வேண்டிக் கொள்ளும்போது. சாய்பாபா அவர்களிடம் பேசுவார் அது எப்படி பேசுவார் என்றால் அவர்கள் வேண்டிக் கொள்ளும்போது சாய்பாபாவை விகிரகத்திலிருந்து பூக்கள் கீழே விழும் அல்லது யாரேனும் ஒருவர் இவர்கள் வேண்டியதற்கு பதில் கூறுவார்கள் அல்லது ஏதேனும் சின்ன சின்ன சவுண்ட் மூலமாக தன் பக்தர்களிடம் சாய்பாபா பேசுவார். அதாவது பக்தர்கள் சாய்பாபாவிடம் பேசும்போது சாய்பாபா நீங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்ற உணர்வைத் தருவது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் அந்த கோவிலுக்குள் நடக்கும். இது பொதுவாக ஏதோ ஒரு சில கோவில்களில் நடக்கக்கூடிய விஷயமே அல்ல ஒவ்வொரு சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களிடம் பேசும்போது நிச்சயமாக இந்த மாதிரியான சில நிகழ்வுகள் நடப்பதுண்டு என்று சாய் பக்தர்கள் சொல்லி கேட்டதுண்டு.

பொதுவாக சாய் பக்தர்கள் சாய்பாபாவை தங்களுடைய தந்தையாகவே தன்னுடைய தாத்தாவாக தத்தெடுத்த துண்டு அப்படிப்பட்ட சாயும் அவர்களை தன் பிள்ளையாக தன் பேரனாக தன் பேத்தியாக வரும் பக்தர்களை தத்தெடுத்து இருக்கிறார். 

பொதுவாக சாய்பாபாவிடம் பக்தர்கள் வேண்டிக்கொள்ளும்போது  எளிதில் அதை நிறைவேற்றக் கூடியதாக இருக்கிறது. அதனாலேயே பலரும் சாயிடம் வந்து தங்களுடைய வேண்டுதலை வைக்கின்றார்கள் சாயும் அவர்களிடம் மனம் விட்டு பேசுகின்றார். ஏதோ ஒரு சவுண்ட் மூலமாக பூக்கள் விக்ரகத்தில் இருந்து கீழே விழுவதும் மூலமாக அல்லது வேறு ஒருவர் மூலமாக பதில்களைக் கூறி பக்தர்களை திருப்தி படுத்துகிறார் சாய்பாபா.

அதனாலேயே இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாய்பாபாவின் பக்தர்களாக மாறிவருகின்றன இதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவு சாய்பாபாவை வேண்டி வணங்கி வருகின்றனர்

சாய்பாபாவும் ஏழு மைல்கள் அப்பால் இருந்து நீ சாய் அப்பா என்று அழைத்த உடனே உன்னை தேடி வந்து உன்னுடைய கஷ்டங்களை போக்குவேன் என்று உறுதியளித்துள்ளார். குறிப்பாக அவர் சமாதியில் இருந்து ஒவ்வொரு பக்தர்களுக்கும் பதில் கூறுவார் என்று அவரே வாக்குமூலம் கொடுத்ததாக ஷீரடியில் வாழ்ந்த காலத்தில் மக்கள் கூறி இன்றளவும் வணங்கி வருகின்றனர்