உன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுக்கும் சாய்பாபா

சாய் பக்தர்களுக்கு வணக்கம் தினமும் சாய் அப்பாவுடைய பொன்மொழிகளை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் அதில் இன்று

என் அன்பு குழந்தையே

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் உங்களுக்கு நடக்கும் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் ஒன்று நடப்பதற்கு சிறிது காலம் ஆகும் அதுவரை பொறுமையாக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு இருங்கள்

உனக்கு எது நடக்கின்றதோ அதை என்னால் ஆசீர்வதிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட விஷயம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு. உனக்கு எது கிடைக்கிறதோ அதை மனதார ஏற்றுக் கொள் உன் வாழ்க்கை சிறப்பாக அமையும்

உனக்கு நடப்பதற்கு தாமதமாக இருக்கலாம் நான் சாய் அப்பாவிடம் தினம்தோறும் வேண்டிக் கொண்டு இருக்கின்றேன் ஆனால் எனக்கு மட்டும் ஏன் எல்லாமே தாமதமாக நடக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் நல்ல கர்மா கெட்ட கர்மா என்று இரண்டு விஷயம். ஒன்று உன் வாழ்க்கையில் நல்ல கருமா உனக்கு நல்ல விஷயங்களை வாரி வழங்கும் கெட்ட கர்மா இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடிய கவலைகள் கண்ணீர் வருத்தம் ஏமாற்றம் எல்லா விஷயங்களுக்கும் அது காரணம், அதை பொறுத்தே உன் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்

எனக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும் என்று நீங்கள் கேட்பது இந்த சாய் என் செவிகளில் கேட்கிறது கவலை வேண்டாம் என் குழந்தையை உன் வாழ்க்கையில் எல்லா நாளும் வசந்த நாளாக அமைய போகிறது அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள் இப்போது நீ படும் வேதனை கஷ்டம் எல்லாம் தீரும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்துக்கொண்டிரு எல்லாம் மாறும் நீ மாறாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் எல்லா விஷயங்களும் மாறக்கூடியது தான் என்பதை நீ மறந்து விடக்கூடாது அதனால் உன்னுடைய கவலைகளை தூக்கி எறி சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்

இந்த வாழ்க்கை ஒரு வாழ்க்கை இதை நீ சந்தோஷமாக அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும் கஷ்டங்கள் வாழ்க்கையில் வரும் போகும் அதே நிரந்தரமாக இருக்காது என்பதை புரிந்து கொண்டு உன்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் அது சாய் அப்பாவால் நடத்தப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக்கொள் உன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ பழகிக் கொள் எல்லாம் மாறும் மாறாத விஷயம் என்று எதுவும் இல்லை

என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சொல்வதைக் கேள் நீ எதிர்பார்த்த வசந்தமான நாள் நீ எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் கூடிய விரைவில் நான் செய்து கொடுப்பேன் இது சத்திய வாக்கு நான் சொல்வதை மனதார நம்பி உன் கடமைகளை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டிரு உன் வாழ்க்கை நிச்சயமாக மாறும் என்று நம்பிக்கையோடு தினம்தோறும் சொல்லிக்கொண்டு நிச்சயமாக மாறும் மாற்றி காட்டுவேன் இந்த சாயை நம்பியவர்கள் யாரும் கைவிடமாட்டார் கெட்டதாக சரித்திரம் இல்லை என்பதை நீ ஒரு நாள் புரிந்து கொள்வாய்

என் பரிபூரண அன்பும் அருளும் பெற்ற என் செல்ல பிள்ளை நீ உன்னை வாழ வைத்து அழகு பார்ப்பதற்காகவே நான் அவதரித்து உள்ளேன் என்பதை மறந்து விடாதே

ஓம் சாய் ராம்