மகேந்திரப் பொருத்தம் / Nagendra porutham

மகேந்திரப் பொருத்தம்



பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரத்திற்கு எண்ணும் போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 என்ற நட்சத்திரங்களுள் ஒன்று வருமானால் மகேந்திரப் பொருத்த முண்டு; பெண் நட்சத்திரத்திலிருந்து 13-ம் நட்சத்திரங்களுக்கு மேல் புருஷ நட்சத்திரமிருந்தால் ஸ்திரீ தீர்க்கம் உண்டு; இந்த மகேந்திரப் பொருத்தத்தில் 4, 3, 22-ம் நட்சத்திரங்கள் வருமானால் தினப் பொருத்தம் இருக்கும். ஆகவே இந்த 3 நட்சத்திரங்களும் ஸ்லாக்கியம் 7, 16, 25-ம் நட்சத்திரங்கள் வருமானால் விதவை நாசிகமென்கிற தோஷங்கள் சம்பவிக்க இடமுண்டு. இந்த 7-வது நட்சத்திரத்தைப் பற்றி தினப்பொருத்தம் விரிவாக கூறப்பட் டுள்ளது. இனி மகேந்திரப் பொருத்தத்தைப் பற்றி ஆராய்வோம். 10,19-ம் நட்சத்திரங்கள் வருமானால் தினப்பொருத்தம் வராது. ஜென்மதாரையாக வரும்.