வேனல் கட்டி வந்தால் என்ன செய்வது? வேனல் கட்டி உடைய எளிமையான வீட்டு மருத்துவ முறை.!

வேனல் கட்டி வந்தால் என்ன செய்வது? வேனல் கட்டி உடைய எளிமையான வீட்டு மருத்துவ முறை.!

சிலருக்கு கோடை காலம் என்று வந்தால் உஷ்ணம் தாங்காமல் வேனல் கட்டி வந்து விடுகிறது இந்த வேனல் கட்டி அதாவது சூட்டு கட்டி உடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிதான் இந்த பதிவில் நான் தெளிவாக பார்க்க போகின்றோம். அதற்கு முன்னாடி உங்களுக்கு அடிக்கடி உடலில் சூட்டு கட்டி வருகிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் இளநீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்று அர்த்தம் அதுமட்டுமல்லாமல் உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் சரி வாருங்கள் பார்ப்போம்.



மூலப்பொருள்

சிலருக்கு கோடை காலத்தில் உஷ்ணம் தாங்காமல் வேனல் கட்டி வரும் அதற்கு நாட்டு மருத்துவம் என்ன சொல்கிறது என்றால் செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலைகளை எடுத்து அதிலே விளக்கெண்ணெய் தடவி தனலில் வாட்டி கட்டி மேல் போட்டால் கட்டி உடைந்து விடும்.

விளக்கம்

கோடை காலத்தில் அடிக்கடி உங்களுக்கு சூட்டு கட்டி வருகிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் இளநீர் அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம் சுடுதண்ணி அதிக அளவு எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும் காலையில் சாதம் அடிக்கக்கூடிய கஞ்சி குடிப்பதன் மூலமாக உடல் உஷ்ணம் குறைக்கப்படும் உடல் சூட்டு கட்டிகள் வராமல் தடுக்கப்படும் இது எல்லாமே நாம் ஆங்கில மருந்துகள் எடுக்காமல் குணப்படுத்தக்கூடிய நாட்டு மருத்துவ முறை இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் பயன்படுத்தலாம் நல்ல ஒரு பலன் அவர்களுக்கு கிடைக்கும்.