தாய்ப்பால் அதிகமாக சுரக்க உணவு முறை

தாய்ப்பால் இல்லாமல் கஷ்டப்படக் கூடியவர்கள் தாய்ப்பால் சுரக்குவது கம்மியாக இருக்கக்கூடியவர்களும் சரி மற்றும் தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் தாய்ப்பால் அதிகமாக சுரக்க எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் எளிமையான உணவு முறையில் தாய்ப்பால் அதிகரிக்க முடியும் அது எப்படி என்பதை தான் பார்க்க போகின்றோம். பாருங்கள் எளிமையான முறையில் தாய்ப்பால் அதிகரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.



★ அரிசியுடன் முளைகட்டிய பாசிப்பயிறு வெந்தயம் பூண்டு சேர்த்து வேகவைத்து கஞ்சாக சாப்பிடலாம் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு, அமுக்கிரா கிழங்கு ஆகியவற்றை பொடித்து ஒரு சிட்டிகை அளவு இந்த கஞ்சியுடன் சேர்த்து குடிக்கலாம்.

★ நாட்டு மருந்து கடைகளில் பிரசவ லோகியம் கிடைக்கும் வாங்கி சாப்பிடலாம் பால் சுரப்பது உறுதி

★ கசகசாவை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்

★ வெந்தயம் அத்திப்பழம் உலர் திராட்சை சிறிது புலி ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் விட்டு சாப்பிடலாம் இதனால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

★ பேரிச்சம்பழம் அல்லது செவ்வாழைப்பழத்தை சுத்தமான தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம் இதனால் தாய்ப்பால் அதிகரிக்கும்

★ மழைப்பூண்டு தேன் என்று கேட்டால் நாட்டு மருந்து கடைகளில் கொடுப்பார்கள் அதை சாப்பிட்டால் பால் பெருகும் வெற்றிலை தாம்பூலம் தரித்தாலும் நல்ல பலன் கிடைக்கும்