ராகு திசையில் சந்திர புத்தி பலன்கள் / Rahu Thisai Chandra puthi Palangal in tamil

ராகு திசையில் சந்திர புத்தி பலன்கள் / Rahu Thisai Chandra puthi Palangal in tamil 

ராகு மஹா தசையில் சந்திர புக்தி ஒரு வருடம், ஆறு மாதங்கள்.

சந்திர பகவான் உற்சாகத்தையும்.
ஸ்திரீகளின் சேர்க்கையையும். சந்தோஷமான பொழுது போக்கையும்.
குடும்பத்தில் இன்பத்தையும் கொடுப்பார். எந்த நிலையில் அவர் இருந்தால்?சந்திர பகவான் கேந்திர - திரிகோண - லாப ஸ்தான லக்ன குடும்ப ஸ்தானத்திலிருந்து கொண்டு தசாநாதனாகிய ராகுவுக்கு மறைவாக இருக்க வேண்டும். புதன் சுக்கிரன் பார்வை பெற்று உச்சம், நட்பு, ஆட்சி ஸ்தானத்திலிருந்தால் மேற்கூறிய நன்மைகளுடன் பந்து ஜனங்களின் சேர்க்கையும், செல்வங்கள் சேருதலும் ஏற்படும்.

இவ்வாறு இல்லாமல் தசாநாதனாகிய ராகுவின் பார்வை பெற்றிருந்தால் கட் நஷ்டங்கள், பொருள் விரயம், உத்தியோகத்திலும் நஷ்டங்கள். மனோ நிம்மதியில்லாமைதான் பலன்களாகும்.

இது ஒரு வருடம் பதினெட்டு நாட்கள் இருக்கும்.