முருங்கை பிசின் நன்மைகள் என்ன முருங்கை பிசின் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பலன் முருங்கை பிசின் எப்படி சாப்பிடுவது / Murungai Pisin Benifit in Tamil | How to eat Murungai resin / Murungai Pisin Benefits for Men's / Murungai Pisin Nanmaikal :-
முருங்கை பிசின் நன்மைகள்:-
முருங்கை பிசின் முருங்கை மரத்திலிருந்து வருகின்ற கம் போன்ற ஒரு தோற்றம் கொண்டது. இதை நாம் சாப்பிடுவதன் மூலமாக உடல் புத்துணர்ச்சி கிடைக்கும். உடலில் உள்ள செல்கள் அத்தனைக்கும் நார் சத்துக்கள் கிடைக்கும. மிக முக்கியமான விஷயம் ஆண்களுக்கு ஆண்மை தன்மையை அதிகரிக்கும். சிறுவயதிலிருந்து தகாத பழக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டிருக்கும் அவர்களுக்கு இந்த முருங்கை பிசின் மிகப்பெரிய அருமருந்தாக பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் இரவு இல்லற வாழ்க்கையில் நேரத்தை நீடிக்கிறது.
முருங்கை பிசின் எப்படி சாப்பிடுவது:-
- நாட்டு மருந்து கடைகளில் முருங்கை பிசின் என்று கேட்டால் உங்களுக்கு கொடுப்பார்கள். ஒரு ஐம்பது கிராம் அதை வாங்கிக்கொண்டு முதலில் அதை சுத்தம் செய்ய வேண்டும் அதில் சிறு சிறு தூசிகளும் மண்களும் ஒட்டி இருக்கும் அதையெல்லாம் எடுத்துவிட்டு அந்த பிசினை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறு சிறு கற்கண்டு அளவிற்கு அதை உடைத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் இரவு ஒரு டம்ளரில் தண்ணி எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கற்கண்டு அளவு முருங்கை பிசினை போட்டு ஊற வைக்க வேண்டும். இருபத்தி நான்கு மணி நேரம் ஊறினால் தான் அது பஞ்சு போன்ற தோற்றத்தை மாறும் அப்படி மாறிய பிறகு அடுத்த நாள் விடிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில்.
- தண்ணீரில் ஊற வைத்த முருங்கை பிசினை தனியாக எடுத்துக்கொண்டு. ஒரு டம்ளரில் பால் எடுத்துக்கொண்டு அதில் ஊற வைத்த முருங்கை பிசினை போட்டு ஒரு டீஸ்பூன் நாட்டு சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டும் இப்படி ஒரு மாதம் அல்லது 42 நாள் ஒரு மண்டலம் குடித்து வந்தால்.
- உடல் ஆரோக்கியம் பெறும், உடல் பலம் பெருகும், ஆண்மை குறைவு நீங்கி இல்லற வாழ்க்கையில் நேரம் அதிகரிக்கும். மிக முக்கியமான விஷயம் ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.
- முருங்கை பிசின் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மிகப்பெரிய பொக்கிஷம். எந்தவித பக்க விளைவும் இல்லாமல் ஒரு மனிதனால் தன்னுடைய ஆண்மையை பெருக்கிக் கொள்வதற்கான அருமருந்தாக இந்த முருங்கை பிசின் இன்று இருந்து கொண்டிருக்கிறது. இதை சாப்பிட்டு ஒவ்வொருவரும் பயன் பெற வேண்டும்.
