மேஷம் ஜூலை மாத ராசிபலன் / Mesham Rasi July Month Rasi palan

மேஷம் ராசி ஜூலை மாத ராசிபலன் மற்றும் அஸ்வினி பரணி மற்றும் கிருத்திகை ஆகிய மூன்று நட்சத்திர சேர்ந்தவர்களின் உடைய ஜூலை மாத ராசி பலனை பார்க்கலாம்.
மேஷம் ராசி அன்பு நண்பர்களே உங்களுடைய ராசிக்கு நாலு மற்றும் ஐந்து சுக்கிரனும் மாத முற்பாதியில் மூன்றில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பொருளாதார நிலை மிகவும் சிறப்பானதாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன அது மட்டுமல்லாமல் உங்களுடைய கடந்த காலம் தொந்தரவுகளும் நெருக்கடிகளும் அடிக்கடி இருந்திருந்தால் அவை அத்தனையும் படிப்படியாக குறைந்து உங்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் பூர்த்தியாகும்.
அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டுக்கு தேவையான அல்லது உங்களுக்கு தேவையான நவீனகரமான பொருட்கள் மற்றும் புதிய வாகனங்கள் புதிய வீடு வாங்குவதற்கு அதிக யோகம் உண்டு. அது மட்டுமல்லாமல் குருவினுடைய பார்வை உங்களுக்கு ஏழாம் வீட்டிற்கு விடுவதால் மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடி வரும் ஏனென்றால் ஏழாம் வீடு என்பது திருமண ஸ்தானம் அதனால் இந்த மாதம் வரன் பார்க்க ஆரம்பித்தால் கண்டிப்பாக ஒரு நல்ல நிகழ்வுகள் உங்கள் வீட்டில் நடக்கும்.