மகர லக்னம்
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பலதிறப்பட்ட வாழ்க்கை அமையும், நானாவித வஸ்திரங்கள் அணிவது ஆடையாபரண சேர்க்கையில் இச்சை, பெண்கள் இன்பத்தில் நாட்டமிருக்கும். சாதுர்யத்துடன் ஆசை, பிறர் மனைவிபால் பேசுவார். முன்னேற்றத்தைக் கருதி பல திட்டங்கள் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
மகர லக்னத்திற்கு அங்காரகன், புதன், சுக்கிரன், சுபர்கள், சந்திரன், குரு பாவிகள். சுக்கிரன் யோககாரர்கள். சுக்கிரனும், புதனும் கூடினால் ராஜயோகம் கொடுப்பார்கள். சூரியனும், சனியும் மாரகம் கொடுக்க மாட்டார்கள். சந்திரனுடன் சேர்ந்த சனி மாரகாதிபன். இவர்கள் மாரக ஸ்தானத்திலிருந்தாலும் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.
மகர லக்னம் ஒருவருடைய பலதிறப்பட்டதாகக் காட்டும் குணமுடையது.