கும்பம் லக்னம் பிறந்தவர் பலன்கள் / Kumbam Lagnam Palangal in tamil

கும்ப லக்னம்

கும்ப லக்னத்தில் பிறந்தவர் மனைவியிடம் அன்புள்ளவராக இருப்பார். தற்புகழ்ச்சியில் ஈடுபடுவராக இருப்பார். பெண்கள் பால் அதிக அன்பும், பரிவும் காட்டுபவராக இருப்பார். கல்வி கேள்விகளில் பூரண பலன் இருக்காது. சில சமயங்களில் கர்வம் அதிகமுள்ளவராக பிறருக்குத் தோற்றமளிப்பார்.
கும்ப லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி மூவரும் சுபர்கள். சந்திரன், செவ்வாய், குரு பாவிகள். சுக்கிரன் யோககாரகன். அங்காரகனும் சுக்கிரனும் கூடியிருந்தால் பிரபலமான யோகத்தைக் கொடுப்பார்கள். குரு மாரகம் கொடுக்க மாட்டான். அங்காரகன் சந்திரனுடன் கூடியிருந்தால் மாரகம் கொடுப்பான். மாரகாதிபர்கள் மாரக ஸ்தானத்திலிருந்தால் மாரகத்திற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்.