கும்பம் ராசி ஜூலை மாத ராசி பலன் / Kumbam rasi July Month Rasi palan

கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் மற்றும் சதயம் நட்சத்திரம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஜூலை மாத ராசி பலன்.
கும்பம் ராசியில் பிறந்த அன்பு நண்பர்களே உங்களுடைய ஜென்மராசியில் சனி , மூன்றில் குரு சஞ்சரிப்பதாலும் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது இந்த மாதம் உங்களுக்கு நல்லது. அது மட்டுமல்லாமல் மூன்றில் ராகு பகவான் மாத பிற்பாதில் ஆறில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு இந்த மாதம் உண்டாகும். அதுமெல்லாம் அல்லாமல் நெருங்கியவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைத்து உங்கள் கஷ்டங்கள் சற்று குறை அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் நீங்கள் எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயத்தை அடைய வேண்டிய இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள் அது மட்டுமல்லாமல் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான அமைப்பாக இந்த மாதம் அமையப்போகிறது. உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இந்த மாதம் இருக்கும் அதோடு செலவுகள் கட்டுக்குள் இருந்தால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து விடுவீர்கள் இந்த மாதத்தில் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நீங்கள் கடன் வாங்குவதிலிருந்து பாதுகாக்கப்படும்