அழுகை எப்படி ஒரு உணர்வு? சிரிப்பு எப்படி ஒரு உணர்வு? அதுபோலத்தான் கோபமும் ஒரு வகையான உணர்வு சிரிப்பு என்ற உணர்வையும் அழுகை என்ற உணர்வையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது அதனால் நமக்கு மிகப்பெரிய நஷ்டமோ பெருத்த கஷ்டமோ ஏற்படுவது கிடையாது ஆனால் இந்த கோபம் என்ற ஒரு விஷயம் வரும்போது நமக்கு அது மிகப்பெரிய மனவேதனையும் மனவலிஜையும் அல்லது வேறொருவரிடம் தகராறுகளையும் ஏற்படுத்திவிடுகிறது அந்த வகையில் கோபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ன மனநிலையில் இருந்து நம்மை கோபப்படுத்துகிறார்கள் என்பதை பற்றியும் கோபம் நம்மை எப்படி கஷ்டப்படுத்தும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
கோபம் நம் உடலை எந்த அளவுக்கு சேதப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வோம்
கோபம் நாம் அதிக அளவு படுவதால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நமக்கு வழிகளும் வேதனைகளும் ஏற்படுகிறது என்பது மிக மிக முக்கியம் இதனால் ரத்த அழுத்தம் இருதய அடைப்பு மற்றும் உடல் ரீதியான வழிகளும் மனரீதியான வேதனைகளும் நமக்கு ஏற்பட ஆரம்பித்து விடுகிறது முதலில் கோவப்படும்போது தெரியாது இதையே நாம் தொடர்ந்து செய்யும்போது அல்லது நம்மை பல பேர் கோபப்படுத்தும் போது நாம் அதற்கு உட்கொள்ளப்படுகிறோம்
கோபப்படுத்தக் கூடியவர்களின் மனநிலை
நம்மை ஒருவர் கோபப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களுடைய நோக்கம் என்னவாக இருக்கும் என்றால் அவர்கள் நம்மை அழ வைத்து பார்க்க வேண்டும் என்பதுதான் அந்த வகையில் நம் முன் ஒருவர் நின்று நம்மை கோபப்படுத்த முயற்சி செய்யும்போது அந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நீ பேசும் வார்த்தைகளை கேட்டு நான் கோபப்பட்டு ஒன்று அழ வேண்டும் அல்லது திருப்பி உன்னோடு வாக்குவாதம் செய்ய வேண்டும் இதனால் என்னுடைய நிம்மதியும் வேதனையும் கலைந்து போக வேண்டும் என்று நீ முயற்சி செய்கிறாய் என்ற ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டாலே, உங்கள் முன் யார் கோபப்படுத்தினாலும் அதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்.