திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூர் கிராமம் திருப்பத்தூருக்கு மிக அருகில் இருக்கக்கூடிய இந்த கிராமத்தைப் பற்றி நாம் ஏன் இன்று பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு - அவதான் சிவ பெருமான்.
திருப்பத்தூர் என்ற பெயர் வருவதற்கு மிக முக்கியமான காரணங்களாக இருந்த திரு பத்து சிவன் திருத்தலங்கள் ஆம் இன்று திருப்பத்தூர் பெயரை பிரித்தால் திரு பத்து ஊர் இந்த பத்து ஊரில் 10 விதமான சிவ ஆலயங்கள் இருக்கின்றன. இந்த பத்து விதமான சிவ ஆலயங்களும் ஏதோ 100 நூறாண்டுகளோ அல்லது 200 ஆண்டுகளோ பழமை வாய்ந்த கோவில் அல்ல 800 ஆண்டுகள் ஆயிரம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாக இன்றளவும் நம் திருப்பத்தூரில் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று திருப்பத்தூர் என்ற பெயர் வர காரணம் என்னவென்று பல பேருக்கு தெரியாமல் இருக்கிறது, அதற்கு காரணம் திருப்பத்தூரில் இருக்கக்கூடிய 10 திருத்தலங்கள், அதில் ஒன்று பிச்சன் ஊரில் அமைந்துள்ளது மிகப் பழமை வாய்ந்த சிவலிங்கம் அதில் உள்ளது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்று சொல்லும் நிலைமையில் அந்த சிவலிங்கம் இன்றளவும் அந்த ஊரில் இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால் கோவில் அளிக்கப்பட்டது ஆனால் அந்த ஊர் மக்கள் சிலையை வைத்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு மிக முக்கிய காரணம் நாம் கடைசியாக போட்டிருந்த பதிவு கிட்டத்தட்ட 1 1/2 ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் இன்னும் அங்கு அந்த ஊரின் பெருமைமிக்க அடையாளத்தை மறந்து ஏன் இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஏனென்றால் பத்து ஊரில் இருக்கக்கூடிய சிவநாலங்களில் ஒன்றான பிச்சனூரில் இருக்கக்கூடிய சிவன் ஆலயம் அந்த ஊரின் அடையாளம் அல்லவா. அந்த அடையாளத்தை நாம் ஏன் இவ்வளவு நாள் கோவில் எழுப்பாமல் தாமதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது, இன்று திருப்பத்தூரில் இருக்கக்கூடிய மிகப்பெரிய செல்வந்தர்கள் சிலர் பிச்சனூர் மையமாகக் கொண்டவர்கள் தான் அப்படி இருக்கையில் இன்னும் தன் ஊருக்கு பெருமைமிக்க அடையாளத்தை இன்னும் அடையாளமாக மாற்றாமல் இருப்பதற்கு அந்த காரணம் என்ன என்று மனம் ஏங்கித் தவிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கு. இந்த பதிவில் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் ஒன்றுதான் ஏன் இன்னும் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவாலயத்தை எழுப்பாமல் இருக்கின்றீர்கள் என்ற ஒரு கேள்வி.
கோவில்தான் அளிக்கப்பட்டு விட்டது சிவலிங்கம் இன்னும் உயிரோடு இருக்கிறது அந்த சிவலிங்கம் பழமையான இடத்தில் அதாவது இருந்த அதே இடத்தை மையமாகக் கொண்டு சுற்றி வட்டாரத்தில் கோவிலை எழுப்ப வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் உங்களிடம்(பிச்சனூர் மக்களிடம்) ஒரு வேண்டுகோள் வைக்கிறோம், நடக்குமா நடக்காதா பொறுத்திருந்து பார்ப்போம்..
இதை முடிந்தவரை திருப்பத்தூர் மக்களுக்கும் பிச்சனூர் மக்களுக்கும் பகிருங்கள் அவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும்.
திருவண்ணாமலை லிங்கத்தை விட ஒரு சுற்றளவு பெரிய லிங்கமாக இந்த லிங்கம் இன்றளவும் இருந்து கொண்டிருக்கிறது என்ற ஒரு பதிலை அந்த ஊரில் வாழ்ந்த என்பது வயது முதியவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட பழமை வாய்ந்த சிவலிங்கத்தை நாம் போற்றி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு திருப்பத்தூர் மக்களினுடைய கடமை ஏனென்றால் திருப்பத்தூர் ஒரு ஆன்மீக பூமி என்பதற்கே இந்த 10 சிவனாலயங்களும் சாட்சி.
கடவுள் இருக்காரா இல்லையா என்ற கோட்பாட்டை தாண்டி இந்த சிவனாலயங்களை மையமாக வைத்து நாம் பார்க்கும் போது திருப்பத்தூர் ஒரு வைணவ சமயத்தை கொண்டதாகவும் சிவன் வழிபாட்டை பெரும் வழிபாடாக மக்கள் செய்து வந்தனர் என்பதும் இதை நாம் வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.
திருப்பத்தூரில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த சிவன் ஆலயங்கள். அதாவது 10 சிவனாலயங்களையும் கண்டிப்பாக ஒவ்வொரு திருப்பத்தூர் மக்களும் போற்றி பாதுகாக்க வேண்டும் குறிப்பாக அதே ஊரை சேர்ந்த மக்கள் பெருமளவு அதை பாதுகாக்க வேண்டியது அந்த ஊர் மக்களின் ஒவ்வொரு கடமையும் அங்கு பிறக்கக்கூடிய குழந்தைகளின் உடைய கடமையும் ஆகும் அப்படிப்பட்ட சிவன் ஆலயத்தை ஒவ்வொரு நபரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
