நீங்கள் இந்த மாதம் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி என்று சொல்லக்கூடிய குரு பகவான்
ரிஷபம் ராசி ஜூன் மாத ராசி பலன் 2023
ரிஷப ராசி நண்பர்களே, அன்பு வணக்கம் உங்களுடைய ராசியின் அதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் மூன்றில் ஒன்று சேர்ந்து இருப்பதால் மற்றும் ஆறில் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது உங்களுடைய இலக்கை அடைந்து விடுவீர்கள் அது மட்டுமல்லாமல் பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உங்களுக்கு இருந்து கொண்டிருக்கும் மற்றும் எதிர்பாராத உதவிகள் சில இடங்களில் சில நபர்களால் உங்களுக்கு கிடைத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் மற்றும் குரு பன்னெண்டில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை நீங்கள் குறைத்துக் கொள்வது உங்களுக்கு நல்லது மற்றும் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது மிக மிக நல்லது குறிப்பாக நீங்கள் கொடுத்தல் வாங்கல் பார்த்து செய்ய வேண்டும் மற்றும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் வாக்குறுதி யாரிடமும் கொடுக்க வேண்டாம்.