சுக்கிரன் தசை : சுய புத்தி / sukira thisai

சுக்கிரன் தசை : சுய புக்தி

சக்கிரன் மகா தசையில் சுய புக்தி மூன்று வருஷம் நான்கு மாதங்கள். சுக்கிரன் அசுர குரு. எல்லாம் நன்மைகளையும் செய்யக் கூடியவர். சுய புக்தியில் சுய ஆட்சி நட்பு ஸ்தானங்களில் லாபாதிபதியாய் இருந்தால் கல்வி ஞானம் திரவிய லாபம். குடும்ப ஷேமம், கீர்த்தி எல்லாம் வாரி வழங்குவார்.
ஆனால், சுக்கிர பகவான் 6, 8, 12 இடங்களில் பகை நீச ஸ்தானத்தில் இருந்துவிட்டால், விரோதம், பொருள் நஷ்டம், கலகங்கள், குடும்பத்திலும் அமைதியின்மை, மனோ வியாகூலம் எல்லாம் ஏற்படும்.