சனிபகவான் யார் who is Sani bhavan yaar
சனிபகவான் அருள் பாவிக்க மனம் வைத்தால் போக பாக்கியங்களைத் தருவார்; இன்றேல் பாதாளத்தில் துள்ளி துடி துடிக்க வைப்பார். இதற்குத் தகுந்தவாறே இவருடைய மனமும் ஒரு சமயம் வெண்ணையைப் போன்றது. மற்றோரு சமயம் இரும்பு போன்றது. துணிவும் ஆற்றலும் மிக்கவர். ஆனால் சில சமயங்களில் சோம்பல் வந்துவிடும். முரட்டு சுபாவமுள்ளவர். அன்புடனேயே பேசினாலும் கடிந்து பேசுவதாகவே தோன்றும். கடினமான வாக்குள்ளவர். சில சமயங்களில் இவர் செய்யும் காரியங்கள் இன்னதென்று இவருக்கே தெரியாது.
