புதன் புத்தி // சூரிய திசையில் புதன் புத்தி பலன்கள் - suriyan thisai puthan puthi palangal

புதன் புத்தி // சூரிய திசையில் புதன் புத்தி பலன்கள் - suriyan thisai puthan puthi palangal

சூரிய தசையில் புதன் புக்தி 10 மாதங்கள் 6 நாட்கள் புதன் லக்ன திரிகோணத்தில் இருந்தாலும் அல்லது வாக்கு ஸ்தானங்களில் இருந்தாலும் வித்தை பிரகாசிக்கும். 

கீர்த்தி வந்தடையும். செல்வம் பெருகும். வியாபாரம் மூலம் பல நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத நன்மைகள் வந்தடையும். ஆனால் 3,6,8,12 ஸ்தானங்களில் புதன் இருந்துவிட்டாலோ செய்தொழிலில் நஷ்டம். எதிர்பார்க்கும் இனங்களில் ஏமாற்றம், வீண் அலைச்சல், குடும்பத்தில் மன வித்தியாசம் மனச்சோர்வு, நிம்மதியில்லாமை இவைகளால் கஷ்டப்பட வேண்டிவரும். மனோ வியாகூலம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.