சூரிய பகவான் என்றால் என்ன.? அதனுடைய குணங்கள் என்ன.? suriya bhagavan palangal

சூரிய பகவான் என்றால் என்ன.? அதனுடைய குணங்கள் என்ன.? suriya bhagavan palangal


சூரிய பகவானைப் பற்றி உனக்கே தெரியும். தன் கிரகங்களால் எதையும் சுட்டெரிக்கும் மகா சக்தியுள்ளவர். உஷ்ணம் அவரிடம் குடி கொண்டிருக்கிறது. அதி வேகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். ஓய்வு. ஒழிவு கிடையாது. சோம்பல் என்பதையே அறியாதவர். எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார். கடமையில் கவனம் வைத்திருப்பவர்.

மகாஞானி. ஞான பிரகாசமுள்ளவர். எல்லோராலும் பூஜிக்கத் தகுந்தவர். சாதுர்யம் என்பது இவரிடமே பிறந்தது. உயர்ந்த பதவியை வகிப்பவர். கால சக்கரத்தின் கதியைப் போல் இவருடைய கதியும் கற்பனைக்கு எட்டாதது. தேஜஸ் உள்ளவர்.

வெண்மை நிறமுள்ளவர். உஷ்ணத்துடன் பிரகாசமும் சேர்ந்த சூரியபகவானுடைய கடுங்கோபத்தை எவரும் தாங்க முடியாது. பூஜிப்பவர்களுக்குப் பல நன்மைகள் செய்யும் சக்தியுள்ளவர்.