புதன் புத்தி // ராகு திசையில் புதன் புத்தி பலன்கள் - rahu thisai puthan puthi palangal

புதன் புக்தி //  ராகு திசையில் புதன் புத்தி பலன்கள் - rahu thisai puthan puthi palangal


ராகு தசையில் புதன் புக்தி இரண்டு வருடங்கள். ஆறு மாதங்கள், பதினெட்டு நாட்கள் இருக்கும்.


புக்தி நாதனாகிய புத பகவானுடைய நிலைமையைக் கவனிக்கும் போது இவர் ஆட்சி நட்பு உச்ச ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய ராகுவின் திரிகோண கேந்திர ஸ்தானத்திலிருந்தால்
கீர்த்தி, புகழ் பெருகி செல்வங்கள் சேர்ந்து வாழ்க்கையானது சந்தோஷமாக அமையும். வியாபாரத்தில் லாபமுண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மேன்மையுண்டு.

இதைவிட்டு புக்தி நாதனாகிய புதன் பகை நீசனாயிருந்து சஷ்டாஷ்டகமாயிருந்தால் வியாதிகள், தரித்திரம், சோர்வு, கலக்கம், நஷ்டங்கள் இப்பேர்ப்பட்ட அசுப பலன்களே உண்டாகும்.