குரு புக்தி // ராகு திசையில் குரு பகவான் புத்தி பலன்கள் - ragu thisai guru bhagavan puthi palangal
ராகு தசையில் குரு பகவான் புக்தி நாதராக இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள், இருபத்து நான்கு நாட்கள் இருப்பார்.
குருபகவான் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். கீர்த்தி, ஆரோக்கியம், வியாபார விருத்தி, குடும்பத்தில் உயர்வு, வெளிவட்டாரங்களில் செல்வாக்கு, இவ்வளவும் பெருகி மனநிம்மதியுடன் இருக்கலாம். அப்போது குருவின் ஸ்தானம் எந்த நிலையிலிருக்க வேண்டும்?
குரு பகவான் லக்ன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், திரி கோணத்தில் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானங்களிலிருக்க வேண்டும். அப்போது மேற்காணும் நல்ல பலன்கள் ஏற்பட்டு ஜாதகர் சந்தோஷ வாழ்க்கையை அனுபவிப்பார்.
இவ்வாறில்லாமல் குருபகவான் 3, 6, 8, 12லிருந்து தசாநாதனாகிய ராகுவுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தாலும் அல்லது தானிருக்கும் ஸ்தானம் பகை, நீசமாயிருந்தாலும் வறுமையின் கொடுமை, விரோதிகளின் தொந்தரவு, பந்துக்களுடன் மனவேற்றுமை, வீட்டை விட்டு வெளியேறுதல் எல்லாம் ஏற்படும்.
