சூரிய புக்தி // குரு மஹா திசையில் சூரிய புத்தி பலன்கள் - guru maha thisai suriya puthi palangal

சூரிய புக்தி // குரு மஹா திசையில் சூரிய புத்தி பலன்கள் - guru maha thisai suriya puthi palangal

குரு மஹா தசையில் சூரிய புக்தி ஒன்பது மாதங்கள் பதினெட்டு நாட்கள்.


சூரிய பகவானுடைய நிலைமையைக் கவனிக்க வேண்டும். அவர் ஆட்சி, உச்சம், நட்பு ஸ்தானங்களிலிருந்து தசாநாதனாகிய குருவுக்கு திரிகோண ஸ்தானத்திலிருந்து விட்டால் நல்ல பலன்களுக்குக் குறைவில்லை. கீர்த்தி பெருகும். செல்வம் கொழிக்கும். நல்ல நண்பர்களால் நன்மையுண்டு. வாழ்க்கையில் நிம்மதி காண்பார்கள்.

ஆனால் புக்தி நாதனாகிய சூரியன் பகை அல்லது நீச ஸதானத்திலிருந்து ராகு, சனி, கேது இவர்களுடைய பார்வை பெற்று தசாநாதனாகிய குருவுக்கு மறைவு ஸ்தானத்தில் இருந்து விட்டால் வீண் அலைச்சல், கவலை பல கஷ்டங்கள் ஏற்படும்.