அங்காரக புக்தி // குரு மஹா திசையில் அங்காரக புத்தி பலன்கள் - angaraga puthi guru maha thisai

அங்காரக புக்தி //  குரு மஹா திசையில் அங்காரக புத்தி பலன்கள் - angaraga puthi guru maha thisai

குரு மஹா தசையில் அங்காரக புக்தி 11 மாதங்கள் 6 நாட்கள் உண்டு. அங்காரகன் ஆட்சி, உச்சம். நட்பு ஸ்தானத்திலிருந்து தசாநாதனாகிய குருவுக்கு கேந்திரத்திலி ருந்தால் பலன்கள் ஏற்படும். பகவத் பக்தி, கல்வி, ஞானம், வித்தைகள் இவைகளில் ஈடுபாடு, வீடு மனை சேர்க்கை, குடும்பத்தில் நல்ல சூழ்நிலை எல்லாம் இருக்கும்.


ஆனால் புக்திநாதனாகிய அங்காரகன்
ஜனன லக்கினத்திற்கு அஷ்டம், ஸ்தானத்தில் இருந்து தசாநாதனாகிய குரு பகவானுக்கு மறைவு ஸ்தானத்திலிருந்தால் உஷ்ண வியாதிகள், சொறி, சிரங்கு, ஆறாத ரணம் கொப்பளங்கள் இவைகளால் வேதனை, கைப்பொருள் நஷ்டம், வழக்குகளில் நஷ்டம், மன : உற்சாகமிழத்தல் முதலிய கெட்ட பலன்கள் ஏற்படும்.