செவ்வாய் பகவான் என்றால் யார்? chevvai bhagavan palangal and yaar
இவர் படைத்தலைவராயிற்றே. படைத் தலைவருக்குத் தேவையானது சுறுசுறுப்பு. படபடப்பு, வேகம், கோபம், எல்லாம் உண்டு. பிறரை அடக்கி ஆள்பவர் தனக்கு எல்லோரும் கீழ்படிய வேண்டும் என்று நினைப்பவர் பிறரைக் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும்படி செய்யும் ஆற்றலும், துணிவும் சக்தியும் மிக்கவர். மற்றவர்கள் இவருடைய தலைமையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
சிவந்த கண்கள் கணல் கக்கும் கண்கள் என்கிறார்களே அப்படி இருப்பவர் உஷ்ண சரீரம் உள்ளவர். சிவப்பு நிறம் எவ்விஷயத்திலும் துரிதம், வேகம், படபடப்பு எல்லாம் இருக்கும்.
