உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த நண்பர்களுக்கான அதிதேவதை ஸ்ரீ விநாயகர் பெருமான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கடவுளுக்கெல்லாம் முதல் முதல் கடவுள் விநாயகர் பெருமான் என்பது போல உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நன்மைகள் செய்யக்கூடிய முதல் கடவுளாக ஸ்ரீ விநாயகர் பெருமான் உங்களுக்கு இருக்கின்றார் அதனால் நீங்கள் எந்த ஒரு நன்மையான காரியங்கள் செய்தாலும் அதற்கு முன் சிவபெருமானை வழிபாடு செய்வது போல விநாயகப் பெருமானை கண்டிப்பாக நீங்கள் வழிபாடு செய்து விட்டு தான் எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள் தூக்கத்தில் கேட்டால் கூட சொல்ல வேண்டும் விநாயகப் பெருமான் தான் எனக்கான கடவுள் என்பதை.
புதிதாகத் தொழில் தொடங்கினாலும் சரி சுபர் நிகழ்ச்சிகள் உங்கள் வீடுகளில் நடந்தாலும் சரி அல்லது ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய முற்பட்டாலும் சரி அந்த நேரங்களில் கண்டிப்பாக நீங்கள் விநாயகர் பெருமானுக்கு பூஜை செய்துவிட்டு அவரை ஒரு ஒன்பது முறை சுற்றிவிட்டு அந்த செயலைச் செய்யும்போது கண்டிப்பாக அது உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் ஏனென்றால் விநாயகப் பெருமான் ஒருவரே உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான அதிதேவதை என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்