சாய்பாபா என்று நமக்கு சொல்லும் தன்னம்பிக்கை / சாய்பாபா பொன்மொழிகள் / Shirdi Sai Baba advice in Tamil

சாய்பாபா என்று நமக்கு சொல்லும் தன்னம்பிக்கை / சாய்பாபா பொன்மொழிகள் / Shirdi Sai Baba advice in Tamil :-

சாய்பாபா என்று நமக்கு சொல்லக்கூடிய தன்னம்பிக்கையான வார்த்தைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏழுமலை தாண்டி ஏழு கடல் தாண்டி யார் ஒருவர் சாய் அப்பா என்று அழைக்கின்றார்களோ என்னுடைய சமாதியில் இருந்து நான் ஓடோடி வருவேன் என்று சாயப்பாவே 14 வாக்கியங்களில் ஒன்றாக சொல்லி இருக்கின்றார்.


சாய் அப்பா என்னோடு இருக்கின்றாரா என்னோடு நடக்கின்றாரா என்ற சந்தேகம் எந்த ஒரு சாய் பக்தர்களுக்கும் தேவையில்லை சாய் அப்பா உங்களோடு இருக்கிறார் உங்கள் மனதில் இருக்கிறார் நீங்கள் போகுமிடமெல்லாம் உங்களோடு பயணிக்கின்றார் என்பதை மறந்து விட வேண்டாம்.

நீங்கள் ஒரு வேலை செய்வதற்கு முன் சாய் அப்பாவிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள் உங்களுக்கு முன்பாகவே அந்த வேலை எளிதாக முடியும்படி செய்து வைப்பார்.

ஒவ்வொரு நாளும் கஷ்டங்கள் உங்களை சூழும் போது ஓம் சாய் ராம் என்ற மந்திரத்தை சொல்ல மறந்து விடாதே. வந்த துன்பங்கள் பணி போல் விலகுவதை உங்களால் உணர முடியும்.

ஓம் சாய் ராம்...