சிவனுக்கு நாம் அபிஷேகம் செய்தால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்

சிவனுக்கு நீங்கள் அபிஷேகம் செய்தால் என்னென்ன நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.

பொதுவாக கடவுளுக்கு அதுவும் நம் கையால் அபிஷேகம் செய்யும்போது அதனுடைய பல நமக்கு அதிகமாக கிடைக்கும் அதனால் தான் நம் முன்னோர்கள் சொல்வார்கள் நீ அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும். உன் கையால் பசும்பால் ஆவது நீ தானம் கொடு அந்த பசும்பால் இறைவன் மீது படும்போது உன்னுடைய கர்மா விலகும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நாம் விநாயகருக்கு அபிஷேகம் செய்யும்போது நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெளிவாக ஒன்றின் பின் ஒன்றாக பார்க்கலாம் வாருங்கள்.


சந்தனம் :
சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். 

தேன் :
நினைத்த காரியம் ஈடேறும்.

விபூதி : 
மங்கல காரியங்கள் நடந்தேறும்.

மஞ்சள்:
தனம், தானியம் பெருகும்.

அன்னம் :
மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும்உண்டாகும்.

நல்லெண்ணெய் :
மனஅமைதி ஏற்படும்.

தண்ணீர் :
குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆயுள் விருத்தி கிடைக்கும்.

பால்:
குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தயிர் :
கஷ்டங்கள் நீங்கும்.

இளநீர்:
வியாதிகள் நீங்கும்.

கரும்புச்சாறு:
கடன் தொல்லை விலகும்.

அரிசி மாவுப்பொடி :
லட்சுமி வாசம் உண்டாகும்.