17/1/2023 - 2026 சனி பெயர்ச்சி என்று நீங்கள் செய்ய வேண்டும்.? மிக முக்கியமான சில விஷயங்கள்.!! 2023 - 2026 / 17/1/2023 Sani Peyarchi Palangal
இந்த சனி பெயர்ச்சி என்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம் :-
2023 ஜனவரி 17 - 2026 ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் மாற்றத்தை கொடுக்கப் போகிறன. இந்த ஜனவரி 17 அன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் முடிந்தவரை திருநள்ளார் சென்று அங்கு இருக்கக்கூடிய சனி பகவானை வழிபட வேண்டும். சனிபகவானை வழிபடுவதற்கு முன் அங்கு இருக்கக்கூடிய குளத்தில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அந்த பரிகார பொருட்களும் அங்கேயே சில கடைகளில் விற்பார்கள் அதை வாங்கிக் கொண்டு வந்து உங்கள் தலையில் வைத்து அந்த குளத்தில் மூழ்கி எழுந்து பிறகு நீங்கள் உள்ளே சென்று சனி பகவானை வழிபட வேண்டும்.
என்னால் திருநள்ளார் செல்ல முடியாது நான் என்ன செய்வது என்று கேட்கக்கூடிய ஒவ்வொருவரும். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலில் கண்டிப்பாக நவகிரகம் இருக்கும் அதில் மேற்கே பார்த்த மாதிரி சனி ஈஸ்வரன் அமர்ந்து கொண்டு இருப்பார் அந்த சனீஸ்வரனை நீங்கள் கண்டிப்பாக 9 முறை சுற்றிவர வேண்டும் அப்படி சுற்றி வந்தால் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை நாளை தொடக்கத்திலேயே சனி ஈஸ்வரன் ஆரம்பித்து வைப்பார்.
ஒருவேளை நீங்கள் நவகிரகத்தையும் வழிபட முடியவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை சனி ஈஸ்வரன் ஈஸ்வரன் பட்டம் கொண்டவர்கள் இந்த சனிபகவான் அதனால் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு நாளை கட்டாயம் ஒவ்வொருவரும் செல்ல வேண்டும். முடிந்தால் திருநள்ளார் சனீஸ்வரனை வணங்க வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டு கருகாமையில் இருக்கக்கூடிய நவகிரகம் அப்படியும் இல்லை என்றால் சிவபெருமானை வழிபட வேண்டும்.
கண்டிப்பாக இந்தாண்டு 2023 ஜனவரி 17ஆம் நாள் மாற்றத்தை கொண்டு வரக்கூடிய சனி பெயர்ச்சி ஒவ்வொருவருக்கும் நல்ல மாற்றத்தையும், பலன்களையும் கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
