சாய்பாபாவின் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகள் திருமணத்திற்காக காத்து இருந்தால் மறக்காமல் இதைப் பாருங்கள் | Sai Baba Talk about Marriage Advice

திருமணம் ஆகப் போற சாய்  பெண் பிள்ளைகள் சாய் ஆண் பிள்ளைகள் உங்களுக்கான பதிவு இது. திருமணத்தை நடத்திவைக்க காத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கான பதிவு இது. தவறாமல் முழுமையாக இதை படியுங்கள் உங்களுக்கே ஒரு தெளிவு பிறக்கும் சாய் அப்பா உங்களோடு இருந்து நல்லதே செய்வார்

திருமணம் என்றால் நிச்சயமாக ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பயம் இருக்கும் நாம் ஆசைப்பட்டது போல் ஆண் அல்லது பெண் அமைவார்களா என்று ஒரு பயம் நிச்சயமாக ஒவ்வொரு இளைஞர்கள் மத்தியிலும் எழக்கூடும். குறிப்பாக பெண் பிள்ளைகள் தங்கள் மனதிற்குள் ஏகப்பட்ட ஆசைகள் கனவுகள் சுமந்து கொண்டு திருமணத்திற்காக காத்திருப்பார்கள் இது பெண்களுக்கு மட்டுமல்ல சாயினுடைய ஆண்பிள்ளைகளும் சேர்த்து அப்படிப்பட்டவர்களுக்கு சாய் அப்பா கூட இருந்து நல்ல வரன்களை அமைத்துத் தருவார் என்று நம்பிக்கையோடு இருங்கள்

திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒரு விஷயம். இந்த திருமணத்தை தள்ளிப்போடாமல் இருபத்தி எட்டு வயது ஆனவுடன் திருமணம் செய்து விட வேண்டும். பெரியவர்கள் சொன்னது போல பருவம் அறிந்து பயிர் செய் அதேதான் பிள்ளைகளுக்கும் வயது இருக்கும்போது திருமணம் செய்து விட வேண்டும் உதாரணத்திற்கு நீங்கள் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கலாம் அந்த காதல் தாமதமாக, புரிந்து கொள்ளாமல் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகாமல் தள்ளிக்கொண்டே போகும் அது ஒரு வயது வரைதான் ஆணுக்காக பெண்ணுக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்க முடியும். இருபத்தி எட்டு வயது ஆனவுடன் நிச்சயமாக திருமணம் செய்து விட வேண்டும் காதல் செய்து கொண்டு இருந்தாலும் சரி காதல் செய்யாமல் இருந்தாலும் சரி 30 வயது நிரம்பி விட்டால் அல்லது 30 வயது தாண்டிவிட்டால் பெண் பிள்ளையோ ஆண் பிள்ளையோ அமைவது கஷ்டம் அதனால் முடிந்த வரை ஒவ்வொரு பிள்ளைகளும் பருவத்தில் திருமணம் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

பொதுவாக நீங்கள் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு செல்லக்கூடிய சாய் பிள்ளைகளாக இருந்தாலும் சரி உங்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் ஒன்றுதான் நீங்கள் திருமணத்தை தள்ளி கொண்டு போனால் உங்களை மட்டும் அந்த விஷயம் பாதிப்பு செய்வதில்லை உங்கள் பெற்றோரையும் அந்த விஷயம் பாதிக்கிறது முக்கியமாக பெற்றோர்கள் தான் இந்த விஷயத்தில் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கும் ஆசை இருக்கும் தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து பேரப்பிள்ளைகளையும் பேத்தியும் தன் மடியில் போட்டு கொஞ்சம் வேண்டும் என்று ஆசைகள் கனவுகள் நிச்சயமாக இருக்கும் அந்த கனவுகளை நாம் சிதைத்துக் கொண்டிருக்கிறோம் அதனால் தாயின் பிள்ளைகள் தயவு செய்து திருமணத்தை தள்ளிப்போடாமல் 28 வயது வரை உன் காதலுக்காக காத்திருக்கலாம் அதற்கு பிறகு உன் பெற்றோர்கள் சொல்லக்கூடிய வார்த்தைக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்து கொண்டால் நிச்சயமாக உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்

சாய் அப்பா உங்க கூட இருக்காரு உங்கள வழிநடத்தினார் நீங்க அவர் சொல்வது போல சாய் என்னை காப்பாற்றுங்கள் என்னை வாழ வையுங்கள் என்னுடைய வம்சாவழியை தலைதூக்க வையுங்கள் என்று அவர்களிடம் மன்றாடி வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளுக்கு அல்லது சாய் அப்பாவை வேண்டகூடிய உங்களுக்கு நிச்சயமாக திருமணம் நடக்கும்

எளிதில் திருமணம் நடக்க செவ்வாய்க்கிழமை அன்று முடிந்தால் முருகன் சன்னதிக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகனை வணங்கி அந்த விக்ரகத்தை மூன்று முறை சுற்றி வந்து மன்றாடி வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் வேண்டிய விஷயம் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் அதை உங்களால் கண்கூடாக பார்க்க முடியும்