கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் நாம் அதைப்பற்றி தான் தெளிவாக பார்க்க போகின்றோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம் வருவது இயல்பு. கோபம் வராதவர்கள் மனிதப் பிறவியாக இருக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மனிதர்களுக்கும் உணர்ச்சிகள் என்பது உண்டு அதன் அடிப்படையிலேயே கோபங்கள் வருகின்றன.
பொதுவாக கோபம் யாருக்கு அதிகமாக வரும் என்றால் உண்மையாக இருக்கக் கூடியவர்களுக்கு கோபம் என்பது அதிகமாக வரும். நேர்மையாக இருக்க கூடியவர்களுக்கு கோபம் எப்போதும் அதிகமாக வரும் மனதில் பட்டதை பளிச் சென்ற முகத்திற்கு நேராக பேசக்கூடிய அவர்களுக்கு கோபம் என்பது அதிகமாக வரும். பொதுவாக கோபம் வரக்கூடியவர்கள் நல்லவர்களாகவே பார்க்க வேண்டும் ஆனால் இந்த சமூகம் கோபப்படுபவர்கள் ஏதோ ஒரு தீவிரவாதி போலவும் ஏதோ ஒரு தீய செயல்களை செய்பவர்கள் போலவே பார்க்கின்றார்கள்.
யாராவது ஒருவர் நம்மை கோபப்படுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நாம் கஷ்டப்பட வேண்டும். கண்ணீர் சிந்த வேண்டும், என்று ஆசை அதனால் அவர்கள் நம்மை காயப்படுத்துகிறார்கள். அவர்கள் காயப்படுத்துவது அவர்களுடைய சொற்களைக் கேட்டு நாம் கண்ணீர் வடிக்க வேண்டும் அதை கண்டு அவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மற்றவர்கள் நம்மை பார்த்து ஏளனமாக பேசுகிறார்கள்.
தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் நம்மை யாராவது ஒருவர் கோபப்பட்டால் அவர்களுக்கு அதில் என்ன நன்மை என்றால் நாம் கோபப்பட்டு கத்திக் கூப்பாடு போட்டு கதற வேண்டும். அதைக் கண்டவர்கள் ஆனந்தப்பட வேண்டும் என்பதற்காக ஒருவர் நம்மை கஷ்டப்படுகிறார்கள். நாம் அதற்கு இடம் கொடுத்து விடவே கூடாது யாராவது இனி நம்மை கோபத்தினால் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அவர்கள் நாம் கஷ்டப்பட்டு வருவதற்காகவே நம்மை பேசுகிறார்கள் அவர்கள் முன் நாம் கண்ணீர் சிந்த கூடாது தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் அப்போது தைரியம் தன்னம்பிக்கை நம் மனதில் உதிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்ள வேண்டும்
நேர்மையாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் கோபம் என்பது வரக்கூடியது இயல்பு அப்படிப்பட்ட கோபத்தை இடம் பொருள் ஏவல் அறிந்து நாம் பேசும் போது அல்லது கோபப்படும் போது பிரச்சினைகள் அங்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது சில இடங்களில் கோபமே படாமல் இருந்தால் நம்மை கோமாளியாக பார்ப்பார்கள் எங்கு கோபப்பட வேண்டும் எங்கு சாந்தமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து நாம் பழக வேண்டும் கோபப்பட வேண்டும்
கோபம் கொடியது அந்த கோபம் நாம் எங்கு காட்டுகிறோம் என்பதை பொறுத்து சந்தோஷம் நம்மில் நிலைத்திருக்கின்றன உதாரணத்திற்கு நம் குடும்பத்தில் நாம் கோபப்பட்டால் நம் சந்தோஷம் கெட்டுவிடும் நம் குடும்பத்தின் சந்தோஷம் கெட்டுவிடும் நம் பிள்ளைகளின் சந்தோஷம் கெட்டுவிடும் இதுவே வேலை செய்யும் இடங்களில் நான் கோபப்பட்டால் உண்மையாக நேர்மையாக இருக்கிறார்கள் என்று பெயர் கிடைக்கும் அப்போ இடம் பொருள் ஏவல் என்று இருக்கிறது அதை பொறுத்தே போவதற்கான மதிப்பு கூட அளவிடப்படுகிறது
நம் குடும்பத்திடம் நம் மனைவியிடம் நம் குழந்தைகளிடம் கோபப்படுவதால் நிம்மதி இழந்து நம்முடைய சந்தோஷத்தை இழக்க நேரிடும் அதனால் எப்போதுமே உங்கள் குடும்பத்திடம் உங்கள் மனைவியுடன் உங்கள் தாய் தந்தையிடம் உங்கள் பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட கூடாது கோபம் காட்டுவதற்கு என்று சில இடங்களில் இருக்கின்றன சில காரணங்கள் இருக்கின்றன அதை பொறுத்தே நம் கோபம் கூட வெளிப்படவேண்டும் அந்த கோபம் கூட அடுத்தவர்களின் மனதை புண்படுத்தாத வகையில் இருந்தால் நிச்சயமாக நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும் ஒவ்வொருவரும் இனி கோபப்படும்போது இடம் பொருள் ஏவல் அறிந்து கோபப்படுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
