சிறந்த மொபைல் போன் எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா | How to Choosing Best Mobile Phone in Tamil

இன்றைய நவீன உலகத்தில் மொபைல் போன் என்பது மிக முக்கியமான விஷயமாக மாறிக் கொண்டு வருகிறது. அப்படி ஒருவர் Mobile phone வாங்க வேண்டும் என்றால் என்னென்ன விஷயங்களை பார்க்க வேண்டும் என்பதை பற்றி இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.



உலகம் மாறி கொண்டு இருக்கிறது, டெக்னாலஜி வளர்ந்து கொண்டிருக்கின்றன, இன்று உலகத்தையே நம் பாக்கெட்டில் அடக்கி விடும் அளவிற்கு நவீனமயமாக மாறிக் கொண்டு வருகிறது. அப்படி மிக முக்கியமான பொருளாக Mobile Phone பார்க்கப்படுகிறது, Mobile Phone கையில் இருந்தால் போதும் உலகத்தில் என்ன வேண்டுமானாலும் பார்க்கலாம் எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் அதற்கு இன்டர்நெட் தேவைப்படுகிறது. 4G 5G என்று மாறிக்கொண்டிருக்கின்றன காலங்களுக்கு தகுந்தவாறு, எப்படி நாம் Mobile Phone  Best ஆக வாங்குவதை பற்றி இந்த பதிவில் நாம் முழுமையாக தெரிந்து கொள்வோம்.



மொபைல் போன் வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்:



1. முதலில் நீங்கள் Mobile வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் உங்களுடைய பட்ஜெட் எவ்வளவு என்பதை முதலில் நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டும். பிறகு நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்குள் எந்த கம்பெனி மொபைல் பெஸ்ட் என்பதை நாம் பார்க்க வேண்டும் கம்பெனியை பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை பார்க்க வேண்டும் அது அடுத்தடுத்த படிக்கும் போது உங்களுக்கே தெரியும்.



2. முதலில் நீங்கள் மொபைல் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் 4gp Ram அல்லது 6gb Ram இருக்கக்கூடிய Mobile phone வாங்க வேண்டும். ஏன் நாம் 4gb ram அல்லது 6gb ram வாங்க வேண்டும் என்று சொல்கின்றோம் என்றால் நிறைய Application நாம் Install பண்ணும் போது அந்த மொபைலை பயன்படுத்துவதற்கு நமக்கு எளிதாக இருக்கும் ஹேங்கிங் பிராப்ளம் வராமல் இருக்கும் அதனால் ram அதிகமாக இருக்கக்கூடிய மொபைலை நாம் தேர்வு செய்ய வேண்டும்.



3. இரண்டாவது விஷயம் மொபைலினுடைய ram நாம் தேர்ந்தெடுத்தவுடன் Display அளவை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுவாக 5.5 inch ஒரு நார்மல் மக்கள் யூஸ் பண்ணுவதற்கு போதுமானது. ஆனால் அதிகமாக மொபைல் பயன்படுத்த கூடியவர்களுக்கு 6inch மொபைல் போதும் அல்லது அதற்கு மேற்பட்ட உங்களுக்கு பிடித்தமான மொபைலினுடைய Display வை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.



4. மூன்றாவதாக நீங்கள் வாங்கக்கூடிய மொபைலில் Battery அளவு மிக மிக முக்கியம். மொபைல் காஸ்லியாக வாங்கிவிட்டு Charge நிக்க வில்லை என்றால் வாங்கி பயனில்லை, அதனால் 5000mhp அல்லது 6000 mhp பேட்டரி இருந்தால் நீங்கள் வாங்கலாம்.



5. நான்காவதாக மேல்சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை அதற்குள் நீங்கள் பிராண்டட் மொபைல் கிடைத்தால் தாராளமாக அதை வாங்கலாம் அப்படி இல்லை என்றால் ரெட்மி, ரியல் மீ, இப்படி பல சைனா கம்பெனிகள் இருக்கின்றன அதில் எது பெஸ்ட் என்று தீர்மானம் செய்து அதில் ஒன்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.



மேல் சொல்லப்பட்ட இந்த ஐந்து பாயிண்ட்களும் ஒருவர் மொபைல் வாங்கும் முன் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும் அதாவது Ram, battery, display  மூன்றும் மிக மிக முக்கியம் அதற்கு அடுத்து 5g அல்லது 4g எது வாங்க வேண்டும் என்பது உங்களுடைய வசதி பொருத்தது, நீங்கள் மொபைல் வாங்கும் முன் நிச்சயமாக இந்த ஐந்து தகவலை தெரிந்துகொண்டு மொபைலை வாங்குங்கள்.

Tags