சாய்பாபாவே தன் ஷீரடியில் வாழ முடியாது எண்ணெய் கடைக்காரர்களும் மளிகை கடைக்காரர்களும் என்னை தொந்தரவு பண்ணுகிறார்கள் நான் சீரடியை விட்டு கிளம்புகிறேன் சாய்பாபாவின் உண்மை கதை

சாய்பாபாவே தன் ஷீரடியில் வாழ முடியாது எண்ணெய் கடைக்காரர்களும் மளிகை கடைக்காரர்களும் என்னை தொந்தரவு பண்ணுகிறார்கள் நான் சீரடியை விட்டு கிளம்புகிறேன் சாய்பாபாவின் உண்மை கதை:-


நம்மைப் போன்று சாதாரண மனிதர்களுக்கு சக மனிதர்களால் தொல்லைகள் ஏற்பட்டால் அது சாதாரணமான விஷயம் ஆனால் அன்று வாழ்ந்த நம் ஷீரடி சாய்நாதருக்கே மல்லிகை கடைக்காரர் மற்றும் எண்ணெய் வியாபாரிகளால் ஒரு மிகப்பெரிய தொந்தரவு சாய் அப்பாவுக்கு ஏற்பட்டது இதனால் அவர் தன் சீரடியை விட்டு வெளியூர் போவதாக மனமுடையும் அளவிற்கு அவர்கள் சாய் அப்பாவை தொந்தரவு செய்திருக்கிறார்கள். ஆம் இந்த பதிவில் சாய் அப்பாவை பற்றிய ஒரு உண்மை கதையை பற்றி பார்க்க போகின்றோம் முழுமையாக படியுங்கள் உங்களுக்கே முழுதும் புரியும்.




சீரடியில் பாபா அமர்ந்து கொண்டிருக்கும்போது அவரை வெளியூரில் இருந்து வந்து கலைஞர்கள் பார்ப்பார்கள் அதாவது நாடக கலைஞர், தெருக்கூத்து ஆடுபவர்கள், சர்க்கஸ் காரர்கள், மாறுவேடம் போட்டு நடிக்க கூடியவர்கள் இப்படி பல பேர் வந்து தன்னுடைய திறமைகளை சாய்பாபா முன்பு நிகழ்த்தி காட்டி அவரிடமிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தை வாங்கிக் கொண்டு போவார்கள் அப்போது இரண்டு ரூபாய் என்றால் எவ்வளவு பெரிய பணமாக இருக்கும் நீங்களே யோசித்துப் பாருங்கள். அது ஒருவரிடம் கொடுத்து அந்த நடிக்கக்கூடிய கலைஞர்களுக்கு கொடுக்க சொல்வார் சாய் அப்பா ஆனால் அவரோ அது இரண்டு ரூபாயிலும் சிறிது பணத்தை திருடிக் கொண்டு மீதியை அந்த கலைஞர்களுக்கு கொடுப்பார். இது சாய் அப்பாவுக்கு தெரியும் ஆனால் அவர் ஏனோ கேட்டது கிடையாது வாய் திறந்து.




இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இந்த என்னை வியாபாரிகளும் மல்லிகை கடைக்காரர்களும் சாய்பாபாவை தினமும் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கின்றன. சாய் அப்பா அங்கு அவரைப் பார்க்க வரக்கூடிய பக்தர்களிடம் நான் இன்னும் சிறிது காலத்தில் இங்கிருந்து போய் விடுவேன் என்னால் இங்கு இருக்க முடியாது என்று அவரே தன் வாயால் சொல்லிவிடுவார். சில நேரங்களில் சூட்சமமாக மறைமுகமான பொருளோடு வார்த்தைகளை சொல்வார் இங்கு நரிகள் அதிகமாக இருக்கிறது இங்கே என்னால் வாழ முடியாது அப்படி எல்லாம் சொல்வார் ஆனால் அந்த தருணத்தில் கூட தாத்யா பாய் என்று சொல்லக்கூடிய அந்தப் பெண்மணிதான் சாய்பாபாவை சமாதானப்படுத்தி அப்பா நீங்க இப்போது போக வேண்டாம் இன்னும் சிறிது காலம் சீரடியிலே இருங்கள். பிறகு நீங்கள் இங்கிருந்து போங்க அப்படின்னு அவரை சமாதானப்படுத்தி துவாரகமாய்க்குள் அனுப்பி விடு வைப்பார்.


சாய்பாபாவும் எதுவும் நடக்காதது போல அங்கு போய் துவாராக மாயில் அன்றாட வேலைகளை பேசுவது பக்தர்களோடு உரையாடுவது என்று எதுவும் நடக்காதது போல அவரும் இருந்து கொண்டிருப்பார்.




இந்த கதையின் மூலமாக ஒவ்வொரு சாய் பக்தர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கடவுளுக்கே பல சோதனைகள் தரப்பட்டது நமக்கும் பல சோதனைகள் தரப்படுகிறது அதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் முறியடித்து வெற்றி பெற வேண்டும் முடிந்தவரை உங்களோடு இருக்கக்கூடியவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது நீங்கள் கொடுத்து உதவ முடியவில்லை என்றாலும் வார்த்தைகளால் அவர்களுக்கு பலம் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் அந்த தாத்தியா பாய் பெண்மணி போல.


ஓம் சாய் ராம்...