உமாமகேஸ்வரி அவர்களுடன் இரண்டு பெண் குழந்தைகள் அந்த காரில் இருந்தனர். காட்டுவழியில் யாருமில்லாத அந்த தருணத்தில் பயத்தோடு நின்று கொண்டிருந்தனர் அந்த குடும்பம். அப்போது அவர்களுக்கு துணையாக சாய் அப்பாவை அழைத்துக்கொண்டு அவருடைய நாமத்தை உச்சரித்துக்கொண்டே அந்த குடும்பம் தனியாக பயத்தில் நின்றுகோண்டிருந்தது யாராவது நமக்கு உதவ மாட்டார்களா என்று சாய் அப்பாவிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தனர்
அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது அவர்கள் நிற்கும் இடத்தை தாண்டி அந்த கார் நின்றது. அந்த குடும்பம் அந்த காரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன, அந்த கார் ரிவல்ஸ் போட்டு அவர்கள் நிற்கும் இடத்திற்கு திரும்ப வந்தது
உங்களுக்கு நான் உதவலாமா என்று கேட்டு. உமா மகேஸ்வரி அவர்களது இரண்டு குழந்தையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு கொண்டு வந்து அவர் விட்டார்
உமா மகேஸ்வரியை அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நான் திரும்பவும் ஊருக்குச் சென்றால் உங்களுக்கு குடும்பத்தோடு நன்றி சொல்கின்றேன் என்று அவர்களிடம் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டார்
உமா மகேஸ்வரியை திருமணம் முடித்து சென்னைக்கு திரும்பி தனக்கு உதவி செய்த அந்த நபருக்கு நன்றி சொல்ல ஆசைப்பட்டு அந்த தொலைபேசி என்னை அழைத்தார். அப்போது அந்த தொலைபேசி எண் வேலை செய்யவில்லை. தனக்கு உதவியது சாய்பாபா தான் என்ற விஷயத்தை அப்போது உமாமகேஸ்வரி புரிந்து கொண்டார்
அந்த நொடியே கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாய்நாதா நான் எங்கிருந்தாலும் உன்னை நினைத்து வேண்டிக் கொண்டு அழும் பொழுது எனக்கு உதவி செய்து என்னை மகிழ்விக்க என்று ஆனந்த கண்ணீரில் உமாமகேஸ்வரி தன் இரண்டு பிள்ளைகளோடு சீரடி செல்ல முடிவெடுத்தார்
எங்கிருந்து சாய் அப்பாவை வேண்டினாலும் உதவி செய்வார் என்பதற்கு உதாரணம் இந்த உண்மை கதை
