சில பேர் சொல்வார்கள் என் வீட்டில் பூஜை போட்டால் தெய்வசக்தி நிறைந்த சாந்தம் என் மனதிற்கு கிடைக்கிறது என்று. அதனாலேயே அவர்கள் வீட்டில் தினம்தோறும் அவர்கள் பூஜை போடுவார்கள் அதனால் பல நன்மைகளையும் அவர்கள் அடைவார்கள்
முதலில் நம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு நம் பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். தினம்தோறும் நம் பூஜை அறையில் இருக்கக்கூடிய இறைவனை பிரார்த்தனை செய்ய தினமும் பூஜைகள் செய்ய வேண்டும்
அப்படி தினம் தோறும் நாம் பூஜைகள் செய்யும்போது ஒரு அரை மணி நேரம் பூஜைகள் முடித்துவிட்டு உங்கள் வீட்டை உற்றுப்பாருங்கள் தெய்வீக சக்தி நிறைந்த மனம் உங்கள் மனதிற்குள் வீசும் அப்போது நீங்கள் புரிந்து கொள்ளலாம் இறைவன் நம் வீட்டில் வாசம் கொண்டிருக்கிறார் என்பதை
சில வீடுகள் என்னதான் பூஜை புனஸ்காரம் செய்தாலும் அந்த லட்சுமிகடாட்சம் அவர்கள் கண்ணுக்குத் தெரியாது காரணம் ஏதோ ஒரு குல தெய்வ குத்தம் அவர்களுக்கு இருக்கும்
ஆனால் நாம் நம்முடைய குல தெய்வத்தின் புகைப்படமும் நம் வீட்டில் வைத்து பூஜை செய்யும்போது. உங்கள் வீட்டை நீங்களே உற்றுப் பாருங்கள் அந்த தெய்வத்தினுடைய வாசம் உங்கள் மனசுக்குள் வீசும் அதை உங்களால் கண்கூடாக உணர முடியும். அப்போது நீங்களே முடிவு செய்து விடுவீர்கள் கடவுள் நம்மோடு தான் இருக்கின்றார் என்பதை. அந்த தருணத்தில் கடவுளை உங்களுக்கு உணர்த்துவார்
முடிந்தவரை தினமும் உங்கள் வீட்டில் பூஜை செய்யுங்கள் நிச்சயமாக இறைவன் இருப்பதை உங்களால் உணர முடியும்
