திருப்பத்தூர் காவல்துறையை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.. குற்றங்களை குறைக்க புதுமுயற்சிகளை கையாளும் காவல் துறை..
திருப்பத்தூர் மாவட்டம் ஆனதில் இருந்து புது புது முயற்சியை மாவட்டம் காவல்துறை நடைமுறைக்கு கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் தலைமையில் சிறப்பு குறை தீர்வு முகாம். நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் எடுக்காமல், திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் தலைமையில் சிறப்பு குறை தீர்வு முகாம் இன்று (21.12.2022) திருப்பத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமில் கடந்த நான்கு மாதங்களாக கருத்து கேட்டுப்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 94 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காரணம் கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் பங்கேற்றனர்.
உண்மையாகவே காவலர்கள் மூலமாக பொதுமக்களுக்கு நன்மைகவும் சிறிதும் குறையக்கூடாது என்று புது யுக்திகளை கையாண்டுகொண்டு வருகின்றனர். உண்மையில் இது வரவேற்க விஷயம்.. கண்டிப்பாக பொதுமக்களும் காவலர்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்..
திருப்பத்தூர் பொதுமக்கள் போலீசார் மீது இருக்கும் தவறான அபிப்பிராயம் போகவும்.. நண்பனாக நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லும் வகையில் .. வாரம்தோறும் குறைதீர்ப்பு முகம் அறிமுகம் படுத்தியது வரவேற்கத்தக்கது.. கண்டிப்பாக திருப்பத்தூர் மக்கள் இதனால் பயன் அடைவீர்கள் இதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்..
முடிந்தவரை இந்த தகவலை பகிருங்கள்..


