100% சர்க்கரை அளவு குறையும்./ சர்க்கரை நோய் உணவு அட்டவணை;
100% sugar level reduction. / Diabetes diet chart:-
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் உட்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சில உணவு பட்டியல்களை பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இதை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உங்களுடைய உடம்பில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு நிச்சயமாக குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
நாளுக்கு நாள் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதில் இருந்து தப்பிக்க பல வழிகள் இருந்தாலும் மிக முக்கியமானது வழி உணவு. அப்படி பட்ட உணவை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இன்று பார்ப்போம். இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிக முக்கியகிமான உணவு பட்டியல்..
சர்க்கரை உணவு பட்டியல்:-
காலை 6 மணி:-
டீ, காபி, பால், சர்க்கரை இல்லாமல் (பாலின் அளவு 150ml)
அருகம்புல் ஜூஸ் 1 டம்ளர் அல்லது கிறீன் டீ போன்றவைகளும் அருந்தலாம்
காலை 9 மணி:-
1.இட்லி 2-3
2.தோசை 2-3
3.சிறிய அடை 2-3
4.கோதுமை உப்புமா 1-2 கப்
5.வேகவைத்த ஓட்ஸ்
6.டிரை ஓட்ஸ் 1 கப்
7.கோதுமை தோசை 1
8.கேழ்வரகு தோசை 1
9.சப்பாத்தி 2
10.வெள்ளை முட்டை ஆம்லெட் 2
11.முழுதானிய பிரெட் - 4 துண்டுகள்
(இதில் ஏதாவது ஒன்று எடுத்துக்கொள்ளலாம்)
காலை 11 மணி:-
ஒரு கிளாஸ் சூப் அல்லது இளநீர் வேர்க்கடலை அரை கப் - ஏதாவது ஒரு பழம்
மதியம் 1 மணி:-
1. 1-2 கப் அரிசி சாதத்துடன் 2 கப் காய்கறிகள் ஒரு கப் பருப்பு மற்றும் ஒரு கப் தயிர்
2. கோதுமையில் செய்யப்பட்ட உணவுகள் , சிகப்பு அரிசி சாதம் அல்லது பழுப்பு அரிசி சாதம்
3. சிறுதானிய உணவுகள்
4. ஓட்ஸ் வகை உணவுகள்
5. ஏதாவது காய், கீரை, சேர்த்துக்கொள்ளவும்.
மதியம் 4 மணி :-
1. ஒரு கப் டீ அல்லது காபி , கோதுமை பிஸ்கட்கள் -2
2. ஒரு கப் சுண்டல் அல்லது ஒரு கப் வேக வைத்த பயறு வகைகள் அல்லது ப்ரூட்சாலட்
இரவு 7 மணி:-
( உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும் ) காலை உணவு மெனுவில் இருப்பதையே இரவுக்கும் கடைப்பிடிக்கலாம்.
இரவு 9 மணி:-
பசி எடுத்தால் மட்டும் அரை கப் வெது வெதுப்பான பால் அல்லது ஒரு கப் பழம்.
மாமிசம் வகைகள்:-
1.சிக்கன் 100 கிராம்
2.மட்டன் 3 துண்டு
3.முட்டை வெள்ளை கரு மட்டும்
4.மீன் 2 துண்டு
(இவை அனைத்தும் வாரம் ஒரு முறை மட்டும்)
தவிர்க்கவும்:-
1.நெய்
2.ஊறுகாய்
3.எண்ணையில் வறுத்த பொருள்
4.மாம்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம்
முக்கியமாக:-
நடை பயிற்சி செய்ய வேண்டும்...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவு முறைகளை பின்பற்றும் போது மறக்காமல் மருத்துவர்கள் கொடுக்கக்கூடிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். சில பேர் நாட்டு மருத்துவத்தை நோக்கி செல்கின்றார்கள், அது ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கின்றன பெரும்பாலான நபர்களுக்கு சர்க்கரையின் அளவு குறைவது கிடையாது அவர்கள் நிச்சயமாக மருத்துவரை அணுகி மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்து சாப்பிடவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும்;
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதாவது தினமும் 300 அல்லது 400 இந்த அளவிலேயே சர்க்கரை அளவு இருந்து கொண்டு வந்தால் நிச்சயமாக முதலில் கண் பாதிப்பு ஏற்படும், பிறகு இருதயம் வலிமையிலக்க ஆரம்பிக்கும், இதன் பிறகு சருமம் அதாவது தோல் சம்பந்தமான வியாதிகள் வரக்கூடும், எல்லாம் விட மிக முக்கியமான ஒரு விஷயம் கிட்னி பாதிப்புகள் ஏற்படும்.
இதனால் நிச்சயமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி இந்த உணவு முறைகளை பின்பற்றும் அதே சமயத்தில் சர்க்கரை மருந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் இது உங்களுக்கு நல்லது உங்கள் உடலுக்கு நல்லது உங்கள் குடும்பத்திற்கு நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...
