கடுமையான வயிற்று வலியை குணப்படுத்தும் எளிமையான வீட்டு மருத்துவம் | Simple Home Remedies to Cure Acute Stomach Ache:
இதுவரை நான் மருந்து சாப்பிட்டது அல்ல எதுவாக இருந்தாலும் வீட்டு வைத்தியத்தின் மூலமாகவே நான் சரி செய்து கொள்வேன் என்று சொல்லக்கூடியவர்களுக்கு. என்றோ ஒரு நாள் வயிற்று வலி ஏற்பட்டால் எளிமையாக நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருளை வைத்து நம்முடைய வயிற்று வலி எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம். லேசான வலி ஏற்பட்டாலும் சரி அல்லது மிதமான வலி ஏற்பட்டாலும் சரி அல்லது அதிகமான வலி ஏற்பட்டாலும் சரி ஆரம்பத்திலேயே வயிறு வலி ஏற்படுகிறது என்றால் இதை நீங்கள் சாப்பிடுவதன் மூலமாக உங்களுடைய வயிற்று வலி முற்றிலும் குணமாகும்.
மூலப் பொருள்:
உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கைக்குத்தல் அரிசி அல்லது புழுங்கல் அரிசியுடன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து ஒரு மண்பானையை எடுத்துக் கொண்டு. அந்த மண்பானையில் வேக வைத்து கஞ்சாக அதை ஆக்க வேண்டும் கஞ்சாக்கிய பிறகு சாப்பிட்டால் சூட்டினால் உண்டாகும் வயிறு வலி அறவே அறுந்து போகும் மீண்டும் அந்த வலி வராது.
செய்முறை விளக்கம்:
சிறிதளவு கை குத்தல் அரிசி அப்படி உங்கள் வீட்டில் கை குத்தல் அரிசி இல்லை என்றால் புழுங்கல் அரிசி நிச்சயமாக எல்லோர் வீட்டிலும் இருக்கும். அந்தப் புழுங்கல் அரிசி உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் அதாவது ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் அளவுக்கு தான் நீங்கள் கஞ்சி குடிக்க முடியும் என்றால் அந்த அளவுக்கு தேவையான புழுங்கல் அரிசியையும் அல்லது கைகுற்றல் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு மண்பானையில் போட்டு நன்கு ஊற வைக்க வேண்டும் இந்த புழுங்கல் அரிசியோடு வெந்தயத்தையும் சேர்த்து மண் பானையில் நன்கு ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு அதை நன்கு கொதிக்க வைத்து கூலாக மாற்ற வேண்டும். அதாவது கஞ்சியாக கொதிக்க வைக்க வேண்டும், கஞ்சாக்கிய பிறகு அதை நீங்கள் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் உங்களுடைய வயிற்று வலி அறவே தீர்ந்து போகும் திரும்ப வராது. ஒரு முறை குடித்தாலே போதுமானது நம்முடைய வீட்டு மருத்துவத்தை நம் முன்னோர்கள் மகத்துவமான மருத்துவமாக சொல்லிக் கொடுத்த மகத்துவம்.
குறிப்பு:
ஆண் பெண் சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் இந்த வீட்டு மருத்துவத்தை உண்பதன் மூலமாக பயன்பெறலாம் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது. பயப்படாமல் சிறிய குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை வயதுக்கு ஏத்தார் போல அளவை மட்டும் நீங்கள் பார்த்து சேர்த்துக் கொண்டால் போதுமானது, இதனால் உங்களுக்கு நிச்சயம் பக்க விளைவுகள் ஏற்படாது.
